முல்லை கையில் குழந்தைக்கு பதிலாக என்ன இருக்குனு பாருங்க.! கழுவி ஊற்றும் ரசிகர்கள்.!

வெளியிட்டது

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து கசிந்த ஒரு வீடியோவால் தற்போது இந்த தொடர் கேலிக்கு உள்ளாகி இருக்கிறது. ஏற்கனவே மூன்று மருமகள்களும் அடுத்தடுத்து கர்ப்பமானதால் கேலிக்குள்ளாகி இருந்த சீரியல், தற்போது வெளியான இந்த வீடியோவால் மீண்டும் கேலிக்குள்ளாகி இருக்கிறது. விஜய் டிவியில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஒளிபரப்பாகத் தொடங்கி சுமார் ஐந்து ஆண்டுகளை நெருங்கி இருக்கிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர். 1300 க்கும் அதிகமான எபிசோடுகள் ஒளிபரப்பான இந்த தொடர் தற்போது பரபரப்பான கட்டங்களை எட்டி வருகிறது. பலரும் சீரியல் முடிவடைய இருப்பதாக கூறிவரும் நிலையில், அது குறித்த எந்த தகவலும் வெளியாகாமல் இருந்து வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

முல்லை கையில் குழந்தைக்கு பதிலாக என்ன இருக்குனு பாருங்க.! கழுவி ஊற்றும் ரசிகர்கள்.! 1

ஏற்கனவே பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பல முறை கேலிக்கு உள்ளாகி இருந்தது. மருமகள் அடுத்தடுத்து கர்ப்பமாக இருந்ததால் பலரும் இந்த சீரியலை கலாய்த்து வந்தனர். இந்த நிலையில் தற்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து ஒரு வீடியோ ஒன்று கசிந்துள்ளது. அதில் குழந்தையை வைத்திருக்கும் படுக்கையில் குழந்தை இல்லாமல் அதற்கு பதிலாக பேட்டரி ஃபேன் ஒன்றை வைத்து முல்லை நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த காட்சியைப் பார்த்த பலரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை கழுவி ஊற்றி வருகின்றனர். இத்தனை நாட்களாக பார்க்கும் எங்களை இது போல் தான் முட்டாளாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? என்று காட்டமான கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர்.

ஏற்கனவே மூன்று மருமகள்களும் குழந்தைகள் படுக்கும் படுக்கையை கையில் வைத்துக் கொண்டிருக்கும் போதே பலரும் கலாய்த்து வந்தனர். வெறும் படுக்கையை வைத்துக்கொண்டு எத்தனை நாளுக்கு தான் காலத்தை ஓட்டுவீர்கள்? என்று கேள்வி எழுப்பி வந்தனர். அதில் வெறும் படுக்கை இல்லை உள்ளே ஃபேன் இருக்கிறது என்பது போல இந்த வீடியோ தற்போது வெளியாகி இருப்பதால் மீண்டும் இந்த சீரியல் கேலிக்குள்ளாகி இருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்