பாண்டியன் ஸ்டோர்ஸ் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இந்த ப்ரோமோவை பார்க்கும் பொழுது விரைவில் மீனாவும் கர்ப்பமாக ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுபோலத்தான் ரசிகர்களும் தங்களது கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான தொடர்களில் ஒன்றுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடர் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரில் ஆரம்பத்தில் நடித்து வந்த பலரும் மாற்றப்பட்டு விட்டனர். சுமார் நான்கு ஆண்டுகளை கடந்து இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. அண்ணன் தம்பிகள் நான்கு பேரைச் சுற்றி இந்த கதை நகர்ந்து வருகிறது. தற்போது கதைப்படி வீடு வாசல்களை அனைத்தையும் இழந்து விட்டு ஒரே வீட்டில் அறைகள் கூட இல்லாமல் அனைவரும் குடும்பமாக வசித்து வருகின்றனர். சில நாட்களாக பாண்டியன் ஸ்டோர்ஸின் கதை கேலிக்கு உள்ளாகி வருகிறது. அதற்கு முக்கிய காரணம் இந்த நாடகத்தின் கதை செல்லும் விதம்தான். வீடு இல்லாமல் அனைவரும் ஒரே அறையில் தூங்கி புழங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மருமகள்கள் அனைவரும் கர்ப்பம் ஆகி இருக்கிறார்கள். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது மருமகளாக இருக்கும் முல்லைக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்று மருத்துவர்கள் கைவிட்டு விட்டனர். ஆனால் தற்போது மருத்துவ அதிசயத்தையும் தாண்டி முல்லை தற்போது கர்ப்பமாக இருக்கிறார். அவரை தொடர்ந்து கடைசி தம்பியாக இருக்கும் கண்ணனின் மனைவியும் கர்ப்பமாக இருக்கிறார். இவர்கள் இருவரும் ஒரே நேரத்தில் கர்ப்பமாக இருக்கும் அதிர்ச்சியை தாங்காத பாண்டியன் ஸ்டோர் ரசிகர்களுக்கு மற்றும் ஒரு அதிர்ச்சியாக மூத்த மருமகள் தனமும் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாக கதை நகர்ந்தது. இதனால் இந்த சீரியல் மிகுந்த கேலிக்கு உள்ளானது. அறைகள் கூட இல்லை, அனைவரும் ஒரே ஹாலில் படுத்து தூங்கி எழுந்து சென்று கொண்டிருக்கிறீர்கள்? அப்புறம் எப்படி குழந்தை வந்தது என்று ரசிகர்கள் கேலியாக பதிவிடத் தொடங்கினர். மேலும் கதை இல்லை என்றால் சீரியலை முடித்து விடுங்கள் என்றும் கமெண்டில் ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் இரண்டாவது மருமகளாக இருக்கும் மீனா மட்டும் கர்ப்பம் ஆகாமல் இருக்க, அவர் மட்டுமே வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் பார்த்துக் கொள்கிறார். மேலும் கர்ப்பமாக இருக்கும் தனது சகோதரிகளையும் அவர் கவனித்துக் கொள்கிறார்் இதை பார்த்த ஜீவா இவ்வளவு வேலையும் ஒரே ஆளாக இருந்து செய்கிறாய் என்று சொல்லி மீனாவிடம் ரொமான்ஸ் செய்து கொண்டிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் அடுத்து மீனாவையும் கர்ப்பம் ஆக்கி விட வேண்டியது தான் என்று சொல்லி காமெடியாக பதிவுகளை போட்டு வருகின்றனர். நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் அந்த ப்ரோமோவை காண..! கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Vijay Television