விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களுக்கு ஒரு தனி மவுசு உண்டு. அந்த வகையில் குடும்ப பாங்கான தொடர்களில் முன்னிலை வகிக்கும் தொடர்களில் ஒன்றுதான் எட்டு மணிக்கு ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ். வழக்கமான இரண்டு பொண்டாட்டி கதைகளோ அல்லது பழி தீர்க்கும் படலங்களோ குறைவாக இருக்கும் ஒரு நாடகம் என்றால் அது பாண்டியன் ஸ்டோர்ஸ் தான். கூட்டுக் குடும்பத்தின் முக்கியத்துவத்தை அழகாக எடுத்துக்காட்டுவதால் இந்த நாடகத்தை பலரும் விரும்பி பார்க்க ஆரம்பித்தனர். நாடகம் பல விறுவிறுப்பான கட்டங்களை எட்டிய போதும், மூன்று வருடங்களை கடந்தும் இன்றும் வெற்றி நடை போட்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணம் இந்த கதையில் வரும் கதாபாத்திரங்கள் தான் குறிப்பாக மூர்த்தி-தனம், ஜீவா-மீனா, கதிர்-முல்லை, கண்ணன்-ஐஸ்வர்யா போன்ற கதாபாத்திரங்கள் நாளுக்கு நாள் விறுவிறுப்பை அதிகப்படுத்திக் கொண்டே இருக்கும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது கடன் பிரச்சனையால் வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார் கதிர். இவர் ஒரு ஹோட்டலில் வேலை செய்து கொண்டு இருப்பதை பார்த்து அவரது மாமியார் சண்டை போட்டு அவரை வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார். வீட்டிற்கு வரும் கதிரிடம் முல்லை நாமே ஏன் ஒரு ஹோட்டல் ஆரம்பிக்க கூடாது என்று கேட்கிறார் இதனால் ஹோட்டல் ஆரம்பிக்கும் முடிவை கதிரும் முல்லையும் எடுக்க, ஒரு இடத்தை வாடகைக்கு எடுத்து ஹோட்டல் தொடங்கி இருக்கிறார்கள். இந்த ஹோட்டல் துவக்க விழாவிற்கு தனது அண்ணியை அழைப்பதற்காக பாண்டியன் ஸ்டோர்ஸ்க்கு செல்கின்றனர் முல்லையும் கதிரும், ஆனால் அங்கு அண்ணி தனம் எதுவுமே பேசாமல் அவர்களை வெளியேற்றி விடுகிறார். ஆனாலும் அனைவரும் தனது ஹோட்டல் திறப்பு விழாவிற்கு வருவார்கள் என்று கதிர் திடமாக நம்பி வேலைகளை ஆரம்பிக்கிறார்.
சமீபத்தில் வெளியாகி இருந்த ப்ரோமோவில் ஹோட்டலுக்கு பால் காய்ச்சுவதற்காக தனது அண்ணன் மூர்த்தி வருவார் என்றும், அவருக்கு தான் முதல் போனி செய்ய வேண்டும் என்றும் கதிர் ஆவலாக காத்துக் கொண்டிருந்தார். அதே போலவே மூர்த்தி ஹோட்டலுக்கு வந்தார். இதேபோல் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் கதிர் ஹோட்டலுக்கு வந்து சாப்பிடுகின்றனர். சொந்தங்களின் அருமையை உணர்த்தும் அந்த ப்ரோமோவை நீங்களும் காண.. Watch the below Video…
Youtube Video Code Embed Credits: Vijay Television