மீண்டும் வந்த லட்சுமி அம்மா..! அம்மாவிடம் மனதில் இருக்கும் கஷ்டத்தை சொல்லி அழும் மூர்த்தி..

வெளியிட்டது

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குடும்ப பங்கான தொடர்களில் ஒன்றுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ். கூட்டு குடும்பத்தின் அருமையை விளக்கி கூறுவதால் பலரும் இந்த நாடகத்தை விரும்பிப் பார்க்கத் தொடங்கினர். தற்போது நாடகத்தில் திருப்பங்கள் ஏற்பட்டுள்ளது. கூட்டுக் குடும்பங்கள் ஒரு கட்டத்தில் பிரிந்து தனித்தனியாக மாறுவது வழக்கம். அதுபோலத்தான் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திலிருந்து மூன்றாவது தம்பியான கதிர் வீட்டை விட்டு வெளியேறி விடுகிறார். இதனால் மனமுடைந்து போன மூத்த அண்ணன் மூர்த்திக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஆபத்தான கட்டத்தை கடந்து, தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். கடையை மூர்த்தியின் மனைவி தனம் தான் பார்த்து வருகிறார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

மீண்டும் வந்த லட்சுமி அம்மா..! அம்மாவிடம் மனதில் இருக்கும் கஷ்டத்தை சொல்லி அழும் மூர்த்தி.. 1

வீட்டை விட்டு வெளியேறிய கதிரோ அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் ஒரு ஹோட்டலில் சர்வர் வேலை பார்த்து வருகிறார். ஆனால் அந்த வேலையும் பறிபோக, தானே சொந்தமாக ஒரு ஹோட்டல் தொடங்கி நடத்தி வருகிறார். பெரிய அளவில் வியாபாரம் இல்லை இருந்தாலும் நம்பிக்கையோடு அவர் அந்த கடையை நடத்தி வருகிறார். இதற்கு இடையே தற்போது ஒரு ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அந்த ப்ரோமோவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் அம்மாவாக இருந்த லட்சுமி மீண்டும் மூர்த்தி கனவில் வருகிறார். அப்போது தனது தாயிடம் மூர்த்தி கதிர் வீட்டை விட்டு வெளியே சென்றதையும், ஜீவா மனைவி மீனாவும், கண்ணன் மனைவி ஐஸ்வர்யாவும் தொடர்ந்து சண்டை போட்டுக் கொண்டே இருப்பதாகவும் தனது மன வேதனையை கூறுகிறார்.

இவர்கள் இருவரும் இப்படி சண்டை போட்டுக் கொண்டே இருந்தால் ஜீவாவும் கண்ணனும் கூட பிரிந்து சென்று விடுவார்களோ என்று தனக்கு பயமாக இருப்பதாக மூர்த்தி கூறுகிறார். அதற்கு அவரது தாய் இந்த வீட்டை முதலில் மாற்ற வேண்டும். அப்போதுதான் இதற்கெல்லாம் தீர்வு கிடைக்கும் என்று சொல்லிவிட்டு கனவில் இருந்து மறைகிறார். அடுத்த நாள் காலையில் ஜீவா குளித்துவிட்டு வரும்பொழுது மேலே இருந்து ஒரு ஓடு அவர் தலையில் விழ பார்த்தது. ஆனால் எதிர்பாராத விதமாக ஜீவா தலையில் விழாமல், கீழே விழுகிறது. இதனால் மீனா இந்த வீட்டை மாற்ற வேண்டும் என்று மூர்த்தியிடம் கோரிக்கை விடுக்கிறார். மூர்த்தியும் அது குறித்து சிந்திக்கிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண.. Watch the below video..

 

Youtube Video Code Embed Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்