மூர்த்தியை நிற்க வைத்து சரமாரியாக கேள்வி கேட்கும் மீனா.. நிலைகுலைந்த மூர்த்தி..

வெளியிட்டது

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ தற்போதது வெளியாகி இருக்கிறது. விஜய் டிவியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் குடும்ப பங்கான தொடர்களில் ஒன்றுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடர் கடந்த மூன்று ஆண்டுகளாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரில் முக்கிய அம்சமே கூட்டுக் குடும்பத்தின் அருமையை விளக்கும் கதைதான். தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஒவ்வொரு பிரச்சினையாக உருவாகி வருகிறது. கடன் பிரச்சனையால் கதிர் வீட்டு வெளியேறிவிட்டார். அதை தொடர்ந்து நடந்த சண்டையால் மூர்த்திக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு அவர் வீட்டிலேயே முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அப்போது மூர்த்தியின் கனவில் வந்த அவரது தாய் இந்த வீட்டை மாற்றினால் தான் எல்லாம் சரி ஆகும் என்று கூறுகிறார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

மூர்த்தியை நிற்க வைத்து சரமாரியாக கேள்வி கேட்கும் மீனா.. நிலைகுலைந்த மூர்த்தி.. 1

இதனால் தாங்கள் இத்தனை காலம் வாழ்ந்த வீட்டை விற்று விட பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் முடிவு செய்கிறது. இதை கதிரிடம் கேட்காமலேயே முடிவு செய்து விடுகிறார்கள். இன்றைய எபிசோடில் கதிரின் மாமியார் பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டிற்கு சென்று சண்டை இடுகிறார். கதிருக்கு தெரியாமல் ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று அவர் கடுமையான கேள்விகளை எழுப்புகிறார். ஆனால் கதிரோ என் அண்ணன் என் தந்தைக்கு பிறகு, தந்தையாக இருந்து எங்களை வளர்த்தவர். அவர் என்னை கேட்காமல் எதுவும் செய்ய மாட்டார் என்று தன் மாமியாரை அடக்கி விடுகிறார். இது ஒரு புறம் இருக்க இன்னொரு புறம் வீட்டை வாங்க யாருமே முன்வரவில்லை. ஆனால் மீனாவின் தந்தை ஜனார்த்தனன் வீட்டை வாங்கிக் கொள்வதாக முன்வந்திருக்கிறார். ஆனால் ஜனார்த்தனிடம் வீட்டை விற்க மூர்த்தி மறுக்கிறார்.

இதனால் கோபமான மீனா ஜனார்த்தனனுக்கு போன் செய்து நடந்த விஷயத்தை கூறுகிறார். தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் மூர்த்தி, தனம், ஜீவா ஆகியோரை நிற்க வைத்து மீனா கேள்வி கேட்கிறார். என்னை உங்கள் வீட்டு பிள்ளை உங்கள் வீட்டுப் பிள்ளை, என்று சொல்வீர்கள். ஆனால் ஏன் என் தந்தையிடம் வீட்டை விற்க மறுக்கிறீர்கள், அப்படியென்றால் இன்று வரை நீங்கள் என்னை ஜனார்த்தனன் மகளாக தானே பார்க்கிறீர்கள்? என்று கடுமையான வார்த்தைகளில் கேள்வி கேட்கிறார். இதனால் அனைவரும் நிலை குலைந்து போகிறார்கள். அந்த ப்ரோமோவை நீங்களும் காண.. Watch the below video..

YouTube video code embed credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்