பாண்டியன் ஸ்டோர்ஸ்-ல் மீண்டும் என்ட்ரி கொடுக்கும் பிரபலம்.! ஆச்சர்யத்தில் ரசிகர்கள்.!

வெளியிட்டது

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மனங்களை கவர்ந்துள்ள ஒரு சூப்பர் ஹிட் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இது திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு எட்டு முப்பது மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. கூட்டுக் குடும்பத்தின் முக்கியத்துவத்தை கூறும் இந்த சீரியலில், அண்ணன் தம்பிகளின் பாசம் பார்க்கும் பார்வையாளர்களை கண்களில் கண்ணீர் வர வைக்கும். சிறுவயதிலேயே தந்தை இறந்துவிட, மூத்த பையன் மூர்த்தி தந்தை ஸ்தானத்திலிருந்து மற்ற மூன்று தம்பிகளை கஷ்டப்பட்டு வளர்த்து அவர்களை ஆளாக்கி திருமணம் செய்து வைக்கிறார். அந்த குடும்பம் எக்காரணம் கொண்டும் உடைந்து விடக்கூடாது, எப்போதும் போல கூட்டு குடும்பமாக இருக்க வேண்டும் என்று சொல்லி அவர் குடும்பத்தை கட்டிக் காத்து வருகிறார். இந்த சீரியலுக்கு பல லட்சம் ரசிகர்கள் உண்டு. இதில் தற்போது 3வது தம்பி கதிர், கடன் பிரச்சினையால் வீட்டை விட்டு வெளியே சென்று விடுவது போல் காண்பிக்கப்படுகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்-ல் மீண்டும் என்ட்ரி கொடுக்கும் பிரபலம்.! ஆச்சர்யத்தில் ரசிகர்கள்.! 1

கதை மிகுந்த சுவாரசியங்களுடனும் திருப்பங்களுடனும் சென்று கொண்டிருக்கிறது. கதையின் சுவாரசியங்களுக்கு முக்கிய காரணம், இது அரைத்த மாவையே அரைக்காமல், தினமும் ஏதாவது ஒரு புதிய மாற்றங்களுடன், கதையை நகர்த்திக் கொண்டிருக்கிறார் இயக்குனர். தற்போது அந்த ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து புதிய புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதாவது சில நாட்களுக்கு முன்பு இந்த நாடகத்தில் அம்மாவாக நடித்து வந்த லட்சுமி இறப்பது போல் காண்பிக்கப்பட்டது. இவர் உண்மையான பெயர் ஷீலா. இவர் நடிகர் விக்ராந்தின் தாயார் மற்றும் தளபதி விஜயின் சித்தியும் ஆவார். நன்றாக சென்று கொண்டிருந்த இந்த சீரியலில் திடீரென லட்சுமி அம்மா இறப்பது போல் காண்பிக்கப்பட்டது. மேலும் அம்மாவின் இறுதிச் சடங்கு காட்சிகள் கிட்டத்தட்ட ஒரு வாரம் ஒளிபரப்பாகியதால் ரசிகர்களை மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக வைத்திருந்தது இந்த சீரியல். அதனால் அந்த மாதத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் டிஆர்பி ரேட்டிங்கிலும் முதலிடம் வகித்தது.

 

பின்னர் ஷீலா பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவின் அம்மா கதாபாத்திரத்தில் என்ட்ரி கொடுத்தார். இந்த கதையில் அவர் வில்லியாக காட்டப்படுகிறார். இந்த நிலையில் திடீரென பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீண்டும் லட்சுமி அம்மா என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சூட்டிங் ஸ்பாட்டில் தனத்துடன் சேர்ந்து லட்சுமி அம்மாவாக ஷீலா எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் அவர்தான் இறந்து விட்டாரே, எப்படி மீண்டும் வருவார் என்று கேள்வி கேட்க, அவர் இறந்தாலும் அடிக்கடி கனவில் தோன்றுவது போன்ற காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதற்காக மீண்டும் அவர் ஒரு சீனில் கனவில் நடிப்பதற்காகத்தான் வந்திருக்கிறார் என்று தகவல்கள் கிடைத்துள்ளது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்