விஜய் தொலைக்காட்சியில் புதிதாக ஒளிபரப்பாக இருக்கும் ‘பனி விழும் மலர் வனம்’ தொடரின் முதல் ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த தொடரில் ‘ஈரமான ரோஜாவே 2’ தொடரில் நாயகனாக நடித்த சித்தார்த் குமரனும், அவருக்கு ஜோடியாக ‘பாரதி கண்ணம்மா சீசன் 2’வில் நடித்த வினுஷா தேவியும் நடிக்க இருக்கின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வினுஷா நடிக்க இருக்கும் முதல் தொடர் இதுவாகும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

‘யாரடி நீ மோகினி’, ‘றெக்க கட்டி பறக்குது மனசு’, ‘தேன்மொழி பி.ஏ’, ‘ஈரமான ரோஜாவே 2’ ஆகிய தொடர்களை நடித்தவன் மூலமாக மக்கள் மனங்களில் இடம் பிடித்தவர் சித்தார்த் குமரன். 2021ம் ஆண்டு ‘அகடு’ என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் புது தொடர் தான் ‘பனி விழும் மலர் வனம்’. விஜய் தொலைக்காட்சியில் இந்த தொடர் விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது.
அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து இந்த கதை எடுக்கப்பட்டு இருப்பதாக ப்ரோமோவைப் பார்த்தாலே தெரிகிறது. இந்தத் தொடரில் சித்தார்த்திற்கு தங்கையாக மௌன ராகம் தொடரில் ஸ்ருதி கதாபாத்திரத்தில் நடித்த ஷில்பா நடித்திருக்கிறார். நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television