1000 எபிசோடுகளை நிறைவு செய்த பாண்டியன் ஸ்டோர்ஸ்.. கேக் வெட்டி கொண்டாடிய டீம்..

வெளியிட்டது

பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் 1000 ஆவது எபிசோடை கொண்டாடும் வகையில் செட்டில் கேக் வெட்டி கொண்டாடியுள்ள புகைப்படங்கள் தற்போது வெளியாகியிருக்கிறது. விஜய் டிவியில் குடும்ப பாங்கான தொடர்களில் முதன்மை வகிப்பது பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன் தம்பி பாசத்தையும் வெளிப்படுத்தும் வகையில் கடந்த நான்கு ஆண்டுகளாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. 4 அண்ணன் தம்பிகளின் கதையும், அவர்களுக்குள் நடக்கும் சிறு சிறு பிரச்சினைகள் குறித்த தொடராக இது இருக்கிறது. ஆரம்பத்தில் இந்த நாடகம் ஆனந்தம் படத்தை காப்பியடித்து எடுக்கப்பட்டது என்ற விமர்சனங்கள் எழுந்தது. ஆனால் மூன்று ஆண்டுகளை சிறப்பாக முடித்து நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது பாண்டியன் ஸ்டோர்ஸ். மக்களும் தொடர்ந்து தங்களது ஆதரவை வழங்கி வருகின்றனர்.

1000 எபிசோடுகளை நிறைவு செய்த பாண்டியன் ஸ்டோர்ஸ்.. கேக் வெட்டி கொண்டாடிய டீம்.. 1

இதில் நடிக்கும் ஸ்டாலின், சுஜாதா, வெங்கட், ஹேமா, குமரன், காவ்யா ஆகியோர்களின் நிஜப்பெயர்களை மறந்து மூர்த்தி-தனம், ஜீவா-மீனா, கதிர்-முல்லையாகத் தான் அனைவருக்கும் தெரியும். அந்த அளவிற்கு நம் வீட்டில் ஒருவராகவே மாறியுள்ளனர். இந்த சீரியலின் மூலமாக மிகப்பெரிய பிரபலமானவர் வி.ஜே. சித்ரா. அவர் கடந்த ஆண்டு மர்மமான முறையில் இறந்து விட்டார். அவருடைய இறப்புக்கு பின்னர் காவியா தான் முல்லையாக நடித்து வருகிறார். ஆரம்பத்தில் இவரை ஏற்றுக் கொள்ள மக்கள் சற்று தயங்கினர். ஆனால் தன்னுடைய சிறப்பான நடிப்பால் இன்று அனைவரின. மனத்திலும் இடம் பிடித்திருக்கிறார் காவியா. இவரும் சீரியலில் இருந்து விலகி பிக்பாஸ் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இந்த நிலையில் மூன்று ஆண்டுகளை கடந்த நான்காவது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது பாண்டியன் ஸ்டோர்ஸ். இதனையடுத்து அந்த குடும்பத்தினர் அனைவரும் செட்டில் சிறப்பாக கேக் வெட்டி கொண்டாடி இருக்கின்றனர். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வரைத்தளங்களில் வெளியாகியிருக்கிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்