விஜய் டிவி லொள்ளு சபாவில் சிறிய சிறிய பாத்திரங்களில் நடித்து பிறகு சினிமா ஓரிரு காட்சிகளில் தலை கட்டிவந்தவர் நடிகர் யோகிபாபு. இயக்குனர் சுந்தர்.சி இவருக்கு கலகலப்பு திரைப்படத்தில் ஒரு சிறிய பாத்திரம் கொடுத்து முதல் அறிமுகம் கொடுத்தார். பின்னர் நடிகர் சிவகார்த்திகேயனின் “மான் கராத்தே”, விஷாலின் “பட்டத்து யானை” போன்ற படங்களில் சிறு சிறு காமெடி வேடங்கள் நடித்தார். Video given below.

இயக்குனர் எம்.மணிகண்டன் இவரை “காக்க முட்டை (2015) படத்தில் முக்கிய பாத்திரத்தில் முதல் முறை நடிக்க வைத்தார். படம் வெளியாகி மிக பெரிய ஹிட் அடித்த நிலையில் மீண்டும் இயக்குனர் எம். மணிகண்டனுடன் இணைந்து விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான “ஆண்டவன் கட்டளை” படத்தில் நடித்து நல்ல விமர்சங்களை பெற்றார். அடுத்தடுத்து வெளியான, “கோலமாவு கோகிலா, பரியேறும் பெருமாள்” போன்ற படங்கள் நல்ல வெற்றியாக அமைய மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதோடு நன்கு ரசிக்கப்படும் கலைஞராக மாறினார்.
அதன் பின் விஜய், ரஜினி, சூர்யா, விஷால் போன்ற நடிகர்கள் படங்களிலும் சில கதை நாயகனாக நடித்த படங்களும் இவருடைய நடிப்பில் வெளியாகின. தர்மபிரபு, குர்கா, மண்டேலா என நிறைய படங்களில் நாயகனாகவும் தோன்றியுள்ளார். இதில் அண்மையில் வெளியான மண்டேலா படம் நல்ல விமர்சங்களை பெற்றது. இப்பொது நடிகர் விஜயின் “வாரிசு”, சிவகார்திகேயனுடன் “அயலான்”, லெஜெண்ட் சரவணன் நடிப்பில் “தி லெஜெண்ட்” என அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார்.
இப்பொது நடிகர் யோகிபாபு கதையின் நாயகனாக நடித்துள்ள “பன்னிக்குட்டி” என்ற படத்தின் ட்ரைலர் நேற்று வெளியாகியுள்ளது. மற்றொரு நாயகனாக கருணாகரன் நடிக்க, உடன் விஜய் டிவி புகழ் ராமர், திண்டுக்கல் லியோனி, சிங்கம்புலி என பலர் நடித்துள்ளனர். முக்கிய பாத்திரத்தில் பன்றி குட்டி ஒன்று நடித்துள்ளது. லைகா ப்ரோடுக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்தை அனுசரண் என்பவர் இயக்கியுள்ளார். படம் வருகிற 8ஆம் தேதி வெளியாகவுள்ளது.
காணாமல் போகும் ஒரு பனிக்குட்டியை மீட்க போராடும் கருணாகரன் இல்லையேல் தோஷம் வந்துவிடும் என கூறும் சாமியார் லியோனி, பாத்துக்கலாம் ஒன்னும் நடக்காது என தோள் கொடுக்கும் சிங்கம்புலி, நண்பனாக படம் முழுக்க வரும் ராமர், அந்த பன்றிக்குட்டியை எடுத்து வைத்து கொண்டு மறைக்கும் யோகிபாபு என படம் காமெடி ஜானரில் தயாராகியுள்ளது. அந்த ட்ரைலரை நீங்களும் பார்க்க…..
Video Courtesy – LycaProductions