படத்தை விமர்சனம் பண்ண 3 லட்சம் கேட்ட ப்ளூ சட்டை.! பார்த்திபன் வெளியிட்ட ஆடியோ.! ப்ளூ சட்டையின் உண்மை முகம்

வெளியிட்டது

ப்ளூ சட்டை மாறனின் உருவ பொம்மையை எரித்தது தன்னுடைய ரசிகர்கள் இல்லை என்றும், ப்ளூ சட்டை மாறன் ஒரு தயாரிப்பாளரின் படத்தை விமர்சனம் செய்வதற்காக மூன்று லட்சம் கேட்டதால் அந்த தயாரிப்பாளர் தான் இது போன்ற செயலில் ஈடுபட்டதாகவும் பார்த்திபன் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு நாட்களாக பார்த்திபனுக்கும், ப்ளூ சட்டை மாறனுக்கும் இடையே வார்த்தை போர் நடந்து வருகிறது. பார்த்திபன் இயக்கி நடித்துள்ள இரவின் நிழல் படத்தை விமர்சித்துள்ள ப்ளூ சட்டை மாறன், இந்த படம் முதல் நான் லீனியர் படம் இல்லை என்றும், ரசிகர்களை இப்படி சொல்லி ஏமாற்ற வேண்டாம் என்றும், மேலும் படத்திற்கு கதை, திரைக்கதை போன்றவைகளே முக்கியமே தவிர இது ஒரே சாட்டில் எடுக்கப்பட்டதா? அல்லது நான் லீனியரா? என்பதெல்லாம் பார்க்கும் ரசிகர்களுக்கு முக்கியமில்லை என்று விமர்சித்து இருந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

படத்தை விமர்சனம் பண்ண 3 லட்சம் கேட்ட ப்ளூ சட்டை.! பார்த்திபன் வெளியிட்ட ஆடியோ.! ப்ளூ சட்டையின் உண்மை முகம் 1

இதற்கு ட்விட்டரில் பதிலடி கொடுத்திருந்த பார்த்திபன், நீங்கள் 15 நாட்களுக்கு முன்பு ஸ்பெஷல் ஷோ போட்டுக் காட்டும் பொழுது ஏன் இது முதல் நான் லீனியர் படம் இல்லை என்று என்னிடம் கூறவில்லை? அப்படி கூறியிருந்தால் நான் அதை சரி செய்து இருப்பேனே? என்று பதில் அளித்து இருந்தார். ப்ளூ சட்டையின் விமர்சனங்களால் கொதித்துப் போன சிலர் அவரின் உருவ பொம்மையை நேற்று எரித்து இருந்தனர். இன்று ட்விட்டரில் அந்த புகைப்படங்களை பகிர்ந்து உங்கள் நாகரிகமான இந்த செயல் தொடரட்டும் என்று பார்த்திபனை மீண்டும் சீண்டு இருந்தார் ப்ளூ சட்டை.
பிரச்சனை நாளுக்கு நாள் வளர்த்துக் கொண்டே போவதால் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பார்த்திபன் ஒரு ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பல கருத்துக்களை அவர் கூறியுள்ளார்.

ஏற்கனவே ட்விட்டரில் சொன்னது போல, ப்ளூ சட்டை மாறன் ஸ்பெஷல் ஷோ பார்க்க வந்தபோதே தன்னிடம் இது முதல் நான் லீனியர் படம் இல்லை என்று கூறி இருந்தால் நான் அந்த தவறை திருத்தி இருப்பேன் என்றும், எனக்கு ரசிகர் மன்றங்கள் எதுவும் இல்லை நேற்று ப்ளூ சட்டையின் உருவப்படங்களை எரித்தவர்கள் எனது ரசிகர்களே இல்லை என்றும் பார்த்திபன் கூறினார். மேலும் ஒரு தயாரிப்பாளரிடம் விமர்சனம் செய்வதற்காக ப்ளூ சட்டை மூன்று லட்சம் கேட்டுள்ளார், அந்த தயாரிப்பாளர் தர மறுத்ததால் அவருக்கும் ப்ளூ சட்டைக்கும் ஏற்கனவே ஏதோ பிரச்சனை இருந்து வந்துள்ளது. அந்த தயாரிப்பாளர் அந்த கோபத்தில் தான் நேற்று எனது பெயரைச் சொல்லி அவரின் உருவ பொம்மையை எரித்துள்ளார் என்றும், எனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, அந்த செயலுக்காக நான் மிகவும் வருந்துவதாகவும், ப்ளூ சட்டையிடம் மன்னிப்பு கேட்பதாகவும் அவர் கூறினார்.

கஷ்டப்பட்டு படம் எடுக்கும் எங்களைப் போன்றவர்களை விமர்சனம் என்ற பெயரில் ஒரு நிமிடத்தில் ஏதாவது சொல்லி விட்டுப் போனால் அதனுடைய விளைவு பயங்கரமாக இருக்கிறது, இதுபோன்ற இவர் செய்வதால் தயாரிப்பாளர்கள் தூக்கில் தொங்குகிற நிலைமை தான் வரும். எனவே நீங்கள் விமர்சனம் செய்யுங்கள், ஆனால் படத்தை பார்த்துவிட்டு விமர்சனம் செய்யுங்கள் என்றும் பார்த்திபன் வேண்டுகோள் விடுத்தார். தொடர்ந்து விமர்சனங்கள் என்கிற பெயரில் சர்ச்சைகளில் சிக்கி வரும் ப்ளூ சட்டை மாறன் தற்போது பார்த்திபனை சீண்டி மீண்டும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறார். பார்த்திபன் பேசிய அந்த முழு ஆடியோவை நீங்களும் கேட்க கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..Watch the below video..

YouTube video code embed credits: Little Talks

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்