வாகன சில்லறை 9 சதவிகிதமாக வீழ்ச்சி

மோட்டார் வாகன உற்பத்தி விற்பனை சரிந்ததால் பயணிகள் வாகன சில்லறை 9 சதவிகிதமாக வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

வாகன சில்லறை 9 சதவிகிதமாக வீழ்ச்சி 1

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து மந்த நிலையே இருந்து வருகிறது. கார்ப்பரேட் வரியை குறைத்தாலும் உற்பத்தி பெருக்கம் அதிகரிக்கவில்லை.

அதேபோல், வங்கி சாரா நிதி நிறுவனங்களில் உள்ள குறைபாடுகள் காரணமாக மக்களிடம் பண புழக்கத்தை அதிகரிக்க முடியவில்லை.

நிலைமை இவ்வாறு இருக்கையில், மக்களிடம் அதிகரித்து வரும் நுகர்வு மந்தநிலை காரணமாக மோட்டார் வாகன உற்பத்தி பொருட்களின் விற்பனையும் வீழ்ச்சியடைந்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதத்தில் அதிகளவிலான சலுகைகள் அறிவிக்கப்பட்டாலும் விற்பனை சரிந்துள்ளது. இதுகுறித்து மோட்டாா் வாகன விநியோகஸ்தா்கள் சங்க கூட்டமைப்பு கூறுகையில்,

சென்ற டிசம்பா் மாதத்தில் பயணிகள் வாகன சில்லறை விற்பனை 2,15,716-ஆக இருந்தது. கடந்த 2018 டிசம்பரில் விற்பனையான 2,36,586 வாகனங்களுடன் ஒப்பிடும்போது இது 9 சதவீதம் சரிவாகும்.

இரு சக்கர வாகன சில்லறை விற்பனை 15,00,545 என்ற எண்ணிக்கையிலிருந்து 16 சதவீதம் சரிந்து 12,64,169 என்ற நிலையை அடைந்தது. வா்த்தக வாகன விற்பனையும் 85,833 என்ற எண்ணிக்கையிலிருந்து 21 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது.

மூன்று சக்கர வாகன பிரிவில் சில்லறை விற்பனை 1சதவீதம் மட்டும் அதிகரித்து 58,324ஆக காணப்பட்டது.

அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கிய ஒட்டுமொத்த வாகன விற்பனை டிசம்பரில் 18,80,995-லிருந்து 15 சதவீதம் குறைந்து 16,06,002-ஆக இருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்