நடிகர் அதர்வா மற்றும் ராஜ்கிரண் நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் தான் பட்டத்து அரசன். இந்த திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் அதர்வா இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் நான் பட்டத்து அரசன். ஏற்கனவே சற்குணம் களவாணி 2, வாகை சூடவா, நையாண்டி சண்டிவீரன் உள்ளிட்ட படங்களை இயக்கியிருந்தார். இதில் சண்டி வீரன் திரைப்படத்தில் அதர்வா சற்குணத்துடன் இணைந்து பணியாற்றி இருந்தார். இந்தப் படத்தை லைகா நிறுவனத்தின் சார்பில் சுபாஷ்கரனும், ஜிகேஎம் தமிழ் குமரனும் இணைந்து தயாரித்து இருந்தனர். இந்தப் படத்தில் ராஜ்கிரண், ராதிகா சரத்குமார், ஆர் கே சுரேஷ் போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படம் குறித்த விமர்சனங்களை தற்போது பார்க்கலாம்.

ராஜ்கிரன் பொத்தாரி என்கிற கதாபாத்திரத்தில் கபடி வீரராக இருக்கிறார். இவருக்கு இரண்டு மனைவிகள் அதில் மூத்த மனைவியும் மகனும் இறந்து விடுகிறார்கள். மூத்த மனைவியின் மகனின் மனைவிதான் ராதிகா. ராதிகாவிற்கு பிறந்தவர் தான் அதர்வா. ராஜ்கிரணின் இரண்டாவது குடும்பம் இந்த மூத்த குடும்பத்தை ஏற்க மறுக்கவே, இவர்கள் தனியாக வாழ்ந்து வருகின்றனர். இரண்டு குடும்பங்களையும் இணைக்க அதர்வா போராடி வருகிறார். அரசு வேலையை விட ஊருக்காக கபடி ஆடி வருகிறார் ராஜ்கிரண். ஒரு கட்டத்தில் ராஜ்கிரணின் குடும்பம் ஊருக்கு துரோகம் விளைவித்துவிட்டதாக ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்படுகின்றனர். பின்பு கபடி விளையாட தெரியாத அதர்வா தனது குடும்பத்தின் மீதுள்ள பழியை எவ்வாறு துடைக்கிறார்?அந்த ஊரை எதிர்த்து எப்படி விளையாட்டு போட்டியில் ஜெயிக்கிறார் என்பதுதான் பட்டத்து அரசன் படத்தின் மீதி கதை.
சண்டிவீரன் படத்திற்கு பிறகு அதர்வா ஒரு பக்கா கிராமத்து பையனாக மாறி நடித்திருக்கிறார். துடிப்பான ஒரு இளைஞராக அவர் அசத்தியிருக்கிறார். ராதிகா வழக்கம் போல அதர்வாவின் அம்மாவாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கபடியை மையமாக வைத்து உருவாகியிருந்த இந்த படம் கபடி போட்டியை மட்டும் காட்டாமல் குடும்பம் பாசம் என அனைத்தையும் ஒரு சேர காட்டி இருப்பது கைதட்டல்களை பெறுகிறது. பஞ்ச் வசனங்களில் அதர்வா ரசிகர்களை கவர்கிறார். கபடி படம் என நம்பி வந்தவர்களுக்கு குடும்ப படமாக மாற்றி இருக்கிறார் இயக்குனர் சற்குணம். கபடி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு இருந்த விதம் அருமையாக இருந்தது. கதாநாயகி ஆஷிகா ரங்கநாத் ஒரு கபடி வீரராக பட்டையை கிளப்பியிருக்கிறார். ராஜ்கிரணின் முதிர்ச்சியான நடிப்பு படத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகிறது.
படத்தின் நெகட்டிவ் விஷயங்களாக பார்க்கப்பட்டிருப்பது அதர்வாவின் கதாபாத்திரத்திற்கு இன்னும் முக்கியத்துவம் கொடுத்து ஆக்சன் காட்சிகளை அதிகப்படுத்தி இருக்கலாம். எமோஷன் காட்சிகளை குறைத்துக் கொண்டிருக்கலாம். ஜிப்ரானின் பாடல், இசை பல இடங்களில் எடுபடவில்லை. சென்டிமென்ட் காட்சிகளை தவிர்த்து விட்டு ஆக்சன் காட்சிகளை கூடுதல் ஆக்கி இருந்தால் படம் வேறு விதமாக இருந்திருக்கும். லாஜிக் ஓட்டைகளை தவிர்த்து விட்டு இந்த படத்தை பார்த்தால் ஒரு முறை பார்க்கக்கூடிய படமாக பட்டத்து அரசன் படம் இருக்கும். இந்த படத்திற்கு தமிழ்க்ளிட்ஸ் வழங்கும் ரேட்டிங் 3/5
Youtube Video Code Embed Credits: Moviebuff Tamil