பைனலுக்காக கடுமையாக பிராக்ட்டிஸ் செய்த பாவனி..பாக்குற நமக்கே தலை சுத்துது

வெளியிட்டது

ஹைதராபாத்தை பூர்வீகமாகக் கொண்டவர் சின்னத்திரை நடிகை பாவனி. இவர் வாய்ப்புகள் தேடி சென்னைக்கு வந்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ரெட்டைவால் குருவி என்ற சீரியலின் மூலமாக தமிழில் அறிமுகமானார். பின்பு இவருக்கு நடிகர் பிரஜினுடன் இணைந்து சின்னத்தம்பி என்ற சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியல் மூலம் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமானார். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார். பின்னர் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தால் சின்னத்திரை பக்கம் திரும்பினார். சின்னத்தம்பி சீரியல் கிடைத்த பிரபலத்தை கொண்டு பிக் பாஸ் சீசன் 5-ல் போட்டியாளராக கலந்து கொண்டார். அந்த சீசனில் அவர் மூன்றாவது இடத்தையும் பிடித்தார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

பைனலுக்காக கடுமையாக பிராக்ட்டிஸ் செய்த பாவனி..பாக்குற நமக்கே தலை சுத்துது 1

 

பிக்பாஸ் சீசன் 5ல் மற்றொரு போட்டியாளராக இருந்த அமீர் பாவனியை காதலிப்பதாக கூறி வந்தார். ஆனால் பாவனிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி அந்த கணவர் தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டதால் பாவனி வேறு திருமணம் செய்து கொள்ளாமலே இருந்து வந்தார். இந்த நிலையில் அமீரின் காதலை ஏற்பதா வேண்டாமா என்று குழப்பத்திலேயே இத்தனை நாள் இருந்து வந்தார். பிக்பாஸ் முடிந்து, இருவரும் பிபி ஜோடிகள் என்னும் நடன நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியிலும் அமீர் பலமுறை பாவனிக்கு தனது காதலை வெளிப்படுத்திய போதும் எதுவும் சொல்லாமலே அமைதி காத்து வந்தார் பாவனி. கடந்த வாரம் நடைபெற்ற பிக்பாஸ் ஜோடிகள் இறுதிச்சுற்றில் பாவனி அமீர் முதல் பரிசை பெற்றனர்.

இன்ஸ்டாகிராமில் இது குறித்து பதிவிட்ட பாவனி முதல் முறையாக அமீரை தானும் காதலிப்பதாக கூறினார். பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இவர்கள் இருவருக்கும் நல்ல நட்பு இருந்தது, அது காதலாக மாறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. நடனமே தெரியாத தன்னை நடனம் ஆட வைத்து விட்டார் அமீர் என்று பலமுறை பாவனியே மேடைகளில் கூறி வந்தார். பாவனிக்கு அமீர் தான் நடனம் சொல்லிக் கொடுக்கும் ஒரு வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது. இறுதிச்சுற்றில் பாவனி ஒரு வளையத்தில் ஏறி நின்று கொண்டு தலைகீழாக சுற்றுவார். அதற்கு பிராக்டிஸ் எடுத்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது. இவ்வாறு கடினமான பிராக்டிஸ் எடுத்ததால் தான் நீங்கள் ஜெயிக்க முடிந்தது என்று பாவனியின் ரசிகர்கள் கமெண்டில் தெரிவித்து வருகின்றனர். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video..

YouTube Video Code Embed Credits: Viral Videos

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்