ஐ லவ் யூ டா அமீர்.! அமீரை கட்டிபிடித்து தன் காதலை வெளிப்படையாக சொன்ன பாவனி. !

வெளியிட்டது

சின்னத்திரையில் காதல் ஜோடிகளாக வலம் வருபவர்கள் அமீர் பாவனி. இவர்கள் இருவரும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஊ சொல்றியா மாமா என்ற நிகழ்ச்சிக்கு வந்துள்ளனர். விஜய் டிவியில் ஒளிபரப்பான ரெட்டைவால் குருவி என்ற சீரியலின் மூலமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் பாவனி. பின்னர் இவர் சின்னத்தம்பி என்ற நடித்தார். அந்த சீரியல் இவருக்கு பெரிய அளவில் கை கொடுத்தது. அதில் கிடைத்த புகழைக் கொண்டு இவருக்கு பிக்பாஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது பிக்பாஸ் சீசன் 5ல் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். பாவனியின் தனிப்பட்ட வாழ்க்கையை பொறுத்தவரையில், அவர் ஹைதராபாத்தை சேர்ந்தவர். தெலுங்கு சீரியல் நடிகர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணம் ஆன மூன்று மாதங்களில் அவர் தற்கொலை செய்து கொண்டார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

ஐ லவ் யூ டா அமீர்.! அமீரை கட்டிபிடித்து தன் காதலை வெளிப்படையாக சொன்ன பாவனி. ! 1
பின்னர் பிக்பாஸில் இருந்த போது அவருக்கும் நடன இயக்குனர் அமீருக்கும் காதல் மலர்ந்தது. ஆனால் இருவரும் வெளிப்படையாக தங்கள் காதலை சொல்லாமலேயே இருந்து வந்தனர். பின்னர் இருவரும் இணைந்து பிக்பாஸ் ஜோடிகள் நடன நிகழ்ச்சி என்னும் நிகழ்ச்சியில் பங்கேற்று டைட்டிலையும் வென்றனர். டைட்டிலை வென்ற சந்தோஷத்தில் தானும் அமீரை காதலிப்பதாக பாவனி கூறியிருந்தார். தற்போது இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகின்றனர். தற்போது செந்தாமரையே என்ற ஒரு ஆல்பம் சாங்கில் நடித்திருந்தனர். இந்த பாடல் நேற்று வெளியாகியிருந்தது. இந்த பாடல் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த பாடலில் இஸ்லாமிய முறைப்படியும், இந்து முறைப்படியும் பாவனியை திருமணம் செய்து கொள்வது போல காட்சிகள் இருந்தது.

 

இந்த நிலையில் இன்றைக்கு ஊர் சொல்றியா மாமா நிகழ்ச்சிக்கு அமீர் மற்றும் பாவனி இருவரும் வந்திருந்தனர். இவர்களிடம் எப்படி உங்களுக்குள் காதல் வந்தது என்று பிரியங்கா கேட்க, அமீர் காதலிப்பது போல ஐ லவ் யூ சொல்கிறார். அதற்கு பாவனியும் மீ டூ அமீர் என்று சொல்கிறார். அந்த வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவை காண.. Watch the below video..

YouTube Video Code Embed Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்