அழகில் அனுஷ்காவை பின்னுக்கு தள்ளிய பாவனி..தேவசேனா கெட்டப் செம்மையா இருக்கு இவங்களுக்கு

வெளியிட்டது

விஜய் டிவியில் ஒளிபரப்பான நாடகங்களின் மூலமாக மக்கள் மனங்களில் இடம் பிடித்தவர் நடிகை பாவனி. இவர் ஹிந்தியில் லாகின் என்ற படத்தில் மூலமாக சினிமாவிற்கு அறிமுகமானார். அதைத் தொடர்ந்து அவர் பல தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். தமிழில் வஜ்ரம் என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். ஆனால் வெள்ளித்திரை இவருக்கு பெரிய அளவில் கை கொடுக்காததால், சின்னத்திரை பக்கம் தலைகாட்டத் தொடங்கினார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ரெட்டைவால் குருவி என்று தொடரின் மூலமாக சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்தார். இந்த நாடகத்தில் குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வினுடன் இணைந்து இவர் நடித்திருந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அழகில் அனுஷ்காவை பின்னுக்கு தள்ளிய பாவனி..தேவசேனா கெட்டப் செம்மையா இருக்கு இவங்களுக்கு 1

பின்னர் மீண்டும் சின்னத்தம்பி என்ற சீரியலின் மூலமாக பிரபலமானார். இதில் அவர் நடிகர் பிரஜினுடன் இணைந்து நடித்திருப்பார். இதில் கிடைத்த பிரபலத்தின் காரணமாகவே அவருக்கு பிக்பாஸ் எனும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. பிக்பாஸ் சீசன் 5ல் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் போது இவருக்கும் நடன இயக்குனராக இருக்கும் அமீருக்கும் காதல் மலர்ந்தது. ஆனால் அமீர் மட்டுமே இது வெளிப்படையாக கூறி வருகிறார். பாவணி இது குறித்து எந்த கருத்தும் கூறாமலேயே இருந்து வருகிறார். இந்த நிலையில் இருவரும் இணைந்து பிக்பாஸ் ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியில் நடனமாடி வருகின்றனர்.

தற்போது கிடைத்துள்ள தகவலின்படி பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் வின்னர் ஆகவும் அமீர் மற்றும் பாவணி ஜோடி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. கடந்த வாரம் பாகுபலி படத்தினை மையமாக வைத்து இருவரும் நடனமாடினர். அதில் அமீர் பாகுபலி போலவும், பாவனி தேவசேனா போலவும் கெட்டப் போட்டு அசத்தியிருந்தனர். இந்த நடனத்தை பார்த்த பலரும் எழுந்து நின்று கைதட்டினர்
தற்போது பாவனி தேவசேனா போல் மேக்கப் போடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.நீங்களும் அந்த வீடியோவை காண.. Watch the below video..

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்