Categories: சினிமா

பவன் கல்யாணின் 52-வது பிறந்தநாளுக்கு OG படக்குழு வெளியிட்ட டீசர்.! இதோ வீடியோ.!

வெளியிட்டது

ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த பவன் கல்யாணின் ஓஜி படத்தின் டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது. தெலுங்கு திரையுலகின் முண்ணனி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் பவன் கல்யாண். நடிகர் சிரஞ்சீவியின் சொந்த தம்பியான இவர் நடிப்பதை தாண்டி அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறார். தெலுங்கு திரையுலகில் தவிர்க்க முடியாத சக்தியாக இருந்து வருகிறார். 1996 ஆம் ஆண்டு வெளியான “அக்கட அம்மாயி இக்கட அப்பாயி” என்கிற படத்தில் மூலமாக அறிமுகமான இவர், 30 படங்களுக்கு மேல் நடித்து முடித்திருக்கிறார். தற்போது கைவசம் ஹரிஹர வீரமல்லூ, ப்ரோ, ஓ.ஜி என்கிற படத்தில் நடித்திருக்கிறார். மேலும் உஸ்தாத் பகத்சிங் என்கிற படத்தில் போலீஸ் அதிகாரியாகவும் நடிக்க இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பவன் கல்யாணின் 52-வது பிறந்தநாளுக்கு OG படக்குழு வெளியிட்ட டீசர்.! இதோ வீடியோ.! 1

பவன் கல்யாணுக்கு முதலில் நந்தினி என்கிற பெண்ணுடன் திருமணமாகி 1997 ஆம் ஆண்டு விவாகரத்து ஆகியிருந்தது. பின்னர் ரேணுதேசாய் என்பவருடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில், 2012 ஆம் ஆண்டு அவரையும் விவாகரத்து செய்து மூன்றாவதாக 2013-ம் ஆண்டு ஆனா என்கிற ரஷ்ய மாடலை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு பொலினோ அஞ்சனா, மார்க் சங்கர் என்கிற இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். சமீப காலமாக பவன் கல்யாண் தனது மூன்றாவது மனைவியையும் விவாகரத்து செய்யப் போகிறார் என்று தகவல் இணையத்தில் தீயாக பரவி வந்தது. ஆனால் அந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார் பவன் கல்யாண்.

தற்போது திரைத்துறை மற்றும் அரசியலை கவனம் செலுத்தி வரும் அவர் ஓஜி என்கிற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படத்தை டிவிவி என்டர்டைன்மென்ட் நிறுவனம் சார்பில் சுஜித் தயாரித்திருக்கிறார். தெலுங்கு உலகின் பவர் ஸ்டார் என்று அழைக்கப்படும் பவன் கல்யாண் தனது 52 வது பிறந்த நாளை இன்று கொண்டாடி இருக்கிறார். இதை முன்னிட்டு படக் குழுவினர் டீசரை வெளியிட்ட ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கின்றனர். நீங்களும் அந்த வீடியோவைக் காண..!கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: DVV Entertainment

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்