Categories: சமூகம்

சபரிமலைக்கு செல்லும் பெண்கள் மீது பெப்பர் ஸ்பிரே அடித்து தாக்குதல்!

வெளியிட்டது
சபரிமலைக்கு செல்லும் பெண்கள் மீது பெப்பர் ஸ்பிரே அடித்து தாக்குதல்! 1

சபரிமலையில் ஐயப்பன் கோவிலுக்கு செல்ல முயன்ற , திருப்தி தேசாய் உள்ளிட்ட 5 பெண்கள், மகாராஷ்டிராவில் இருந்து விமானம் மூலம் கேரளாவின் கொச்சி நகருக்கு வந்து இருந்தனர். அவர்களை பிந்து, அம்மணி ஆகிய இருவரும் வரவேற்றார்கள்.

பின்னர் 7 பேரும் சேர்ந்து கார் மூலம் பம்பைக்குச் சென்றுள்ளனர். அங்கு அவர்களை தடுத்து நிறுத்திய, ஐயப்ப கர்ம சமிதி எனும் அமைப்பைச் சேர்ந்தவர், கோயிலுக்குச் செல்ல முயன்றால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்றும், எனவே திரும்பிச் செல்லுமாறும் வற்புறுத்தினர். இதனை ஏற்க மறுத்து பிந்துவும், அம்மிணியும் செல்ல முயன்றபோது, அவர்கள் இருவர் மீதும் ஐயப்ப கர்ம சமிதியினர் திடீரென மிளகாய் பொடி கொண்ட ஸ்பிரேவை தூவினர். 

இதையடுத்து பிந்து, அம்மினி ஆகிய இருவரையும் மீட்டு, போலீசார் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றனர். மேலும், திருப்தி தேசாய் உள்ளிட்ட 5 பேரையும் கொச்சியில் உள்ள காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தை அடுத்து ஐயப்ப பக்தர்கள் நாம கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்