தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் போலவே ஹீரோயின்களுக்கும் கொடுக்கப்படுகிறது. அதில் ஒரு சில ஹீரோயின்கள் முதல் படத்தில் வெற்றி கண்டால் அவர்கள் முன்னணி கதாநாயகிகள் ஆகிவிடுவர். அப்படி வெற்றி பெற்ற கதாநாயகிகள் கூட குறிப்பிட்ட வருடங்களுக்கு பிறகு பட வாய்ப்புகள் இல்லாமல் இருப்பர்.

படம் வெற்றி பெற்றால் கதாநாயகிகளுக்கு ஏராளமான வாய்ப்பு கிடைக்கும். 2004ல் வெளியான காதல் படம் மூலம் அறிமுகமானவர் சரண்யா நாக். அவர் அந்த படத்தில் நடிகை சந்தியாவின் தோழியாக நடித்திருந்தார். முதலில் சரண்யா நாக் காதல் படத்தின் கதாநாயகியாக அறிமுகமாகவிருந்தது. ஆனால் பின்பு அந்த வாய்ப்பு சந்தியாவிற்கு கிடைத்தது.
பின்னர் 2௦௦9ல் வெளியான ஜெயம் ரவி நடித்த பேராண்மை படத்தில் நடித்தார். பேராண்மை படத்தில் ஜெயம் ரவியுடன் காட்டில் பயணிக்கும் 5 பெண்களுள் ஒருவராக அஜிதா எனும் கதாபாத்திரத்தில் நடித்தார். இவரது கதாபாத்திரம் அனைவரையும் கவரும் வண்ணம் அமைந்தது.
பின்பு சரண்யா நாக் ஹீரோயினாக மழைக்காலம் என்ற படத்தில் நடித்தார். பின்பு 2 தெலுங்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. இது மட்டுமல்லாமல் இவர் தமிழில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். குழந்தை நட்சத்திரடாக நடித்த படங்கள் காதல் கவிதை மற்றும் நீ வருவாய் என ஆகிய படங்களில் நடித்திருந்தார்.
தற்போது படவாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் இருக்கிறார். சமீபத்தில் இவர் அடையாளம் தெரியாதது போல் உடல் எடை கூடி உள்ளாராம். இதுமட்டுமல்லாமல் இவரது புகைப்படம் தற்சமயம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி உள்ளது.