கடந்த டிசம்பர் மாதம் வரையிலான நறுமணப் பொருட்களின் ஏற்றுமதி 19 சதவீதமாக அதிகரித்துள்ளது.

சீரகம், வெந்தயம், மஞ்சள், மிளகாய், புதினா, நறுமண எண்ணெய் மற்றும் ஓலியோரெசின் போன்ற பல்வேறு நறுமணப் பொருட்கள் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
இவற்றுள் ஏற்றுமதியை பொருத்தவரை மிளகாய் முதலிடத்திலும் இதற்கு அடுத்தபடியாக வெள்ளைபூண்டு இரண்டாம் இடத்திலும் உள்ளன.
கடந்த 2017-18ஆம் நிதியாண்டில் சுமார் 10.28 இலட்சம் டன் நறுமண பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. இந்நிலையில் தற்போதைய நிதியாண்டில் ரூ.20,000 கோடிக்கு நறுமணப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது.
இதன் மூலம் நறுமணப் பொருட்களின் ஏற்றுமதி 19 சதவீதம் உயர்ந்துள்ளன.