
சென்னையில் இன்று பெட்ரோல் விலையில் மாற்றமின்றி நேற்றைய விலையில் விற்பனை ஆகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணையிக்கும் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த முறை கையாள்வதற்கான அனுமதியை இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கியது.
இந்நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு கடந்த 2 நாட்களாக விலை மாற்றமின்றி ரூ.77.58க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை 16 காசுகள் அதிகரித்து ரூ.69.97க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.