
டீசல் விலை மாதத்திற்கு இரண்டு முறை மாற்றி அமைக்கும் முறை செயல்பட்டு வந்தது. இது சில ஆண்டுகளுக்கு முன்பு கைவிடப்பட்டது. இந்த நடைமுறை சுமார் 15 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் தற்போது நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது. இந்த நடைமுறையில் எரிபொருட்களின் விலை சிறிதளவு இறக்கம் ஏற்பட்டு, பெருமளவு ஏற்றம் அடைந்து வருகிறது. தொடர்ச்சியாக அதிரடி ஏற்றங்களை கொடுத்து வரும் பெட்ரோல், டீசல் விலையால் பொதுமக்கள் பெருமளவில் சிரமத்திற்கு உள்ளானார்கள்.
இந்த நிலையில் சென்னையில் பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 5 காசுகள் குறைந்து, லிட்டருக்கு ரூ.75.45ஆக விற்கப்படுகிறது. டீசல் விலையில் மாற்றமின்றி, லிட்டருக்கு ரூ.69.50ஆகவும் விற்கப்பட்டு வருகிறது.