
சர்வதேச சந்தையில் நிலவி வரும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. பெட்ரொல், டீசல் விலை நாள்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து லிட்டருக்கு 10 காசுகள் அதிகரித்து, ஒரு லிட்டர் ரூ.77.72 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் மாற்றமின்றி, ஒரு லிட்டர் ரூ.69.47 ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.