தென்னிந்திய சினிமாவின் மைக்கில் ஜாக்சன் என செல்லமாக அழைக்கப்படுபவர் நடிகர் பிரபு தேவா. இவர் நடிகர் மட்டுமில்லாமல் , இயக்குனர் மற்றும் நடன இயக்குனர் என சினிமாவை வலம் வருகிறார். தளபதியை வைத்து இவர் இயக்கிய போக்கிரி படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருந்தது. நடனம் ஆடுபவர்கள் பலருக்கும் நடனத்தின் மேல் காதல் வர காரணம் நடிகர் பிரபு தேவா என்றே சொல்லலாம். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இவர் தளபதி உடன் இணைந்து நடித்த கோட் திரைப்படம் பெரும் வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்று இருந்தது. இப்படத்தை தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் பிரபு தேவா. தற்போது இவருக்கு அடுத்ததாக ஜோபி சாம் இயக்கத்தில், பேட்ட ராப் படம் வெளியாக உள்ளது. இப்படத்திற்கு இமான் இசைமைத்து உள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்ற வச்சி செய்யுதே என்ற பாடல் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். பாடலில் பிரபல நடிகை சன்னி லியோன் நடனத்தில் அதிரடி காட்டி மிரட்டி எடுத்து உள்ளார். இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
Embed Video Credits : T SERIES TAMIL