பிச்சைக்காரன் 2 படத்தின் முதல் நான்கு நிமிட காட்சிகள் இன்று வெளியாகும் என்று நேற்று விஜய் ஆண்டனி அறிவித்திருந்த நிலையில், தற்போது அந்த வீடியோ வெளியாகி இருக்கிறது. இதை ஸ்னீக் பீக் என்றும், “பணம் உலகை காலி பண்ணிடும்” என்ற வாசகத்துடன் அவர் இந்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். மியூசிக் டைரக்டராக இருந்து பின்னாளில் நடிகராக மாறியவர் நடிகர் விஜய் ஆண்டனி. இவர் இயக்குனர் சசி இயக்கத்தில் பிச்சைக்காரன் என்கிற படத்தில் நடித்தார் இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது விஜய் ஆண்டனி கைவசம் பல படங்களில் நடித்து வருகிறார். மழை பிடிக்காத மனிதன், வள்ளி மயில், கொலை, ரத்தம், காக்கி, பிச்சைக்காரன் 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் பிச்சைக்காரன் 2 படத்தில் தற்போது நடிப்பதோடு மட்டுமல்லாமல் இயக்குனராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார். பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பு சமீபத்தில் மலேசியாவில் நடந்து கொண்டிருந்தபோது அவருக்கு விபத்து ஏற்பட்டு தாடை பற்கள் அனைத்தும் உடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது தான் மிகவும் குணமடைந்து விட்டதாகவும், தாடை மூக்கு எலும்புகள் ஒன்று சேர்ந்து விட்டன என்றும் மீண்டும் பிச்சைக்காரன் 2 படத்திற்கு திரும்பி இருப்பதாகவும் சமீபத்தில் ட்விட்டரில் பதிவு ஒன்றை போட்டு இருந்தார் விஜய் ஆண்டனி. இந்த நிலையில் விஜய் ஆண்டனி நடத்து வரும் படங்களின் அடுத்தடுத்த அப்டேட்கள் தற்போது வெளியாகி வருகிறது. அந்த வகையில் இன்று மாலை 5 மணிக்கு பிச்சைக்காரன் 2 படத்தின் முதல் நான்கு நிமிட காட்சிகள் ஸ்னீக் பீக்காக வெளியாகும் என்று அறிவித்திருந்தார் விஜய் ஆண்டனி. இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டு இருந்த அவர் “பணம் உலகை காலி பண்ணி விடும்” என்று தமிழ் இங்கிலீஷ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பதிவிட்டு இருந்தார். மேலும் பிச்சைக்காரன் 2 திரைப்படம் கோடை விடுமுறைக்கு வெளியாக இருப்பதாகவும் அவர் அறிவித்திருக்கிறார்.
இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இதன் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமத்தை ஸ்டார் குழுமம் மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது படத்தில் இருந்து முதல் நான்கு நிமிட காட்சிகள் வெளியாகி இருக்கிறது. இதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video.!
Youtube Video Embed Code Credits: Vijay Antony