Categories: சினிமா

குண்டு, காளிதாஸ் போன்ற படங்களை மீண்டும் திரையிட வேண்டும்! டி.சிவா!!

வெளியிட்டது
குண்டு, காளிதாஸ் போன்ற படங்களை மீண்டும் திரையிட வேண்டும்! டி.சிவா!! 1

கோலிவுட்டில் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் செயலாளராக இருந்த டி.சிவா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்களுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாக ஒரு வேண்டுகோள் என்று ஆரம்பித்து,

திரையரங்குகளில் சமீபத்தில் வெளியாகியுள்ள “குண்டு” காளிதாஸ் போன்ற தரமான திரைப்படங்கள் வெற்றியடைய வாய்ப்பு இருந்தும், தொடர்ந்து வாரா வாரம் வெளியாகும் திரைப்படங்களால் கதையம்சம் கொண்ட தரமான திரைப்படங்கள் நீண்ட நாள் முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.

இதனால் திரையரங்க உரிமையாளர்கள் மேற்படி குண்டு, காளிதாஸ் ஆகிய 2 திரைப்படங்களையும் முடிந்த அளவு திரையரங்குகளில் திரையிட்டு அந்த திரைப்படங்களின் தயாரிப்பாளர், நடிகர், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு ஒரு அங்கீகாரம் கொடுக்கும் வகையிலும், பாராட்டு தெரிவிக்கும் வகையிலும் மீண்டும் திரையிட வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்