Categories: அரசியல்

வேலை வாய்ப்பு குறைந்தது பற்றி பிரதமர் மோடி பேசத் தயாரா! பிரியங்கா சவால்!!

வெளியிட்டது
வேலை வாய்ப்பு குறைந்தது பற்றி பிரதமர் மோடி பேசத் தயாரா! பிரியங்கா சவால்!! 1

ஜார்கண்ட் மாநிலத்தின் பாகூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா பங்கேற்று பேசினார். பின்னர், அவர் பேசுகையில், பிரதமர் மோடி நாட்டின் உண்மையான நிலையை பற்றி பேசவதை விட்டு விட்டு வெறும் சாக்குப்போக்குகளை மட்டுமே கூறி வருவதாக கடுமையாக சாடியுள்ளார்.

மேலும் இது குறித்து அவர் கூறியதாவது, ‘தேர்வில் தோல்வியடைந்த மாணவனை போல் சாக்குப்போக்கு சொல்லும் பிரதமர் வேலைவாய்ப்பு உருவாக்குதல், பொருளாதாரத்தை வலுப்படுத்துதல், பெண்களுக்கு பாதுகாப்பு அளித்தல், பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துதல், அனைவருக்கும் உணவு, நீர் வழங்குதல் போன்றவற்றில் அரசு தோல்வியை தழுவி வருகிறது என்றார். ஆனால் இதைப்பற்றி கேட்டால் பிரதமர் மோடியோ, காங்கிரசை குற்றம் சாட்டுவதையே வழக்கமாக வைத்துள்ளார்’ என்றும் விமர்சித்தார்.

பா.ஜனதா கட்சி கடந்த 5 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தும் மக்களுக்கு நலம் தரும் விதத்தில் எதையும் செய்யவில்லை என்பதே உண்மை விமர்சனம் செய்த பிரியங்கா, பா.ஜனதா வெறும் விளம்பரத்தில் மட்டுமே சூப்பர் ஹீரோ எனவும், பணியில் சூப்பர் ஜீரோ எனவும் அவர் குறிப்பிட்டார். பட்டினி இறப்பு, வேலையில்லா திண்டாட்டம், கற்பழிப்புகள், ஊழல் போன்றவை தொடர்பாக பேச மோடிஜி தயாரா? எனவும் அவர் சவால் விட்டார்.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்