தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சி தான் பிக்பாஸ். இதை பார்க்காத நபர்களே இருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு மிகப் பிரபலம். 5 சீசன்களை கடந்துவிட்ட பிக்பாஸ் தற்போது ஆறாவது சீசனை தொடங்க இருக்கிறது. குத் வித கோமாளி நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்ததால் பிக் பாஸ் தொடங்குவது தாமதமாகி கொண்டிருந்தது. குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில் தற்போது பிக் பாஸ் சீசன் 6 இன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொகுப்பாளர் ரக்ஷன், சூப்பர் சிங்கர் சீனியர் நாட்டுப்புற பாடகியான ராஜலட்சுமி ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், தற்போது மற்றும் ஒரு நபர் கலந்து கொள்ள இருப்பதாக அவரே தகவல் தெரிவித்து இருக்கிறார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

கொரோனா காலம் என்பதால் முதலில் போட்டியாளர்களை தேர்வு செய்து விட்டு, அவர்களை தனிமைப்படுத்தும் வேலையை பிக்பாஸ் டீம் தொடங்குவார்கள். தற்போது கிடைத்துள்ள தகவலின் படி செப்டம்பர் கடைசி வாரம் அல்லது அக்டோபர் முதல் வாரத்தில் சீசன் 6 தொடங்கும் என்றே தெரிகிறது. இந்த சீசனையும் கமலே தொகுத்து வழங்க இருக்கிறார் என்பதும் உறுதியாகி உள்ளது. போட்டியாளர்களாக யார் யார் இதில் கலந்து கொள்வாளர்கள் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே ஆரம்பித்துவிட்டது. இந்த நிலையில் பாலிமர் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த ரஞ்சித் சில நாட்களுக்கு முன்பு பாலிமரிலிருந்து விலகி விட்டதாக தனது சோசியல் மீடியா பக்கத்தில் அறிவித்திருந்தார். அப்போதே அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகத்தான் செய்தி வாசிப்பில் இருந்து விலகி விட்டார் என்ற செய்திகள் வந்த நிலையில், தற்போது அவரே பிக்பாஸ் குறித்து பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
அதில் அவர் பேசும் பொழுது, “40 நாட்கள் நடக்கும் நிகழ்ச்சி என்று வைத்துக் கொள்ளுங்கள். அதில் நான் கலந்து கொள்ள இருக்கிறேன்” என்று அவர் கூறினார். தமிழில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் அதிகபட்ச நாட்கள் ஒளிபரப்பாவது பிக்பாஸ் மட்டுமே. அதுவும் 100 நாட்கள். இவர் 40 நாட்கள் என்று சொல்வது பிக்பாஸை தான் குறிக்கிறார் என்பது போல் உள்ளது. எனவே விரைவில் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்று தெரிகிறது. ஆழமான தமிழ் உச்சரிப்பு கொண்டவர் ரஞ்சித். இவருடைய குரலில் ஏற்ற இறக்கமான பேசும் செய்திகளை பலரும் கேட்டிருப்போம். அதில் பிரபலமான ஒன்றுதான் ” பார்ப்பதற்கே அப்பாவி போல் இருக்கும் இவன் தான் தாமரை குலத்தைச் சேர்ந்த இவன்தான் சைக்கோ கொலையாளி” . பிக்பாஸ் பொறுத்த வரை ஒவ்வொரு சீசனுக்கும் ஒரு செய்தி வாசிப்பாளரை உள்ளே அனுப்புவது வழக்கம். சீசன் மூன்றில் லாஸ்லியா, பாத்திமா பாபு, சீசன் 4 அனிதா சம்பத் போன்றவர்களை அனுப்பி இருக்கிறது. தற்போது அடுத்த செய்தியாளராக ரஞ்சித்தும் உள்ளே செல்ல இருப்பது குறிப்பிடத்தக்கது. அவரின் பேட்டியை நீங்களும் காண..Watch the below video..
Youtube Video Code Embed Credits: Mercury