Categories: அரசியல்

பொங்கலுக்கு ரூ. 1000! முதலவர் அறிவிப்பு!!

வெளியிட்டது
பொங்கலுக்கு ரூ. 1000! முதலவர் அறிவிப்பு!! 1

விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து பிறந்துள்ள கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக நேற்று (நவம்பர் 26) உதயமானது. இந்த நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் கலந்துகொண்ட பிரம்மாண்ட கூட்டம் நடைபெற்றது.

இதில் புதிதாக உருவாகியுள்ள கள்ளக் குறிச்சி மாவட்டத்துக்கான பல்வேறு நலத்திட்ட உதவிகளை எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்துள்ளார். அப்போது அவர் பேசுகையில், “பொங்கல் திருநாளை தமிழக மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடும் விதத்தில் அரிசி, வெல்லம், கரும்பு உள்ளிட்ட பொங்கல் வைக்க தேவையான பொருட்கள் அடங்கிய பொங்கல் பையும், 1000 ரூபாய் பணமும் வழங்கப்படும்” என அறிவித்துள்ளார்.

குடும்ப அட்டைகளுக்கு வழங்கப்படும் இந்த பொங்கல் பை, பணம் ஜனவரி மாதத்தில் நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் என ஊகிக்கப்படுகிறது. வழக்கமாக தமிழ்நாடு அரசு சார்பில் பொங்கல் வைக்க தேவையான பொருள்களும் கரும்பும் மட்டுமே வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 1000 ரூபாய் வழங்க உத்தரவிட்டார்.

இது மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது. அந்த சமயம் திருவாரூர் சட்டமன்ற இடைத்தேர்தல் நடத்தபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தேர்தலை மனதில் வைத்து வாக்காளர்களைக் கவருவதற்காக உள்நோக்கத்துடன் இந்த பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டது என அப்போது எதிர்கட்சிகளால் விமர்சிக்கப்பட்டது. ஆனால் அதன்பின் அந்த இடைத்தேர்தல் ரத்தானது குறிப்பிடத்தக்கது. 

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்