1950-களில் வெளிவந்த மிகப்பெரிய நாவல்தான் பொன்னியின் செல்வன். அமரர் கல்கியின் கைவண்ணத்தில் உருவாகி இருக்கும் மிகப் பிரம்மாண்ட நாவல் இது. ஆரம்பத்தில் இந்த கதையை ஒரு வார இதழில் சிறுகதையாக எழுதி வந்தார் கல்கி. பின்னாளில் ரசிகர்களின் ஆர்வம் கூடவே கதை விரிவாக எழுதப்பட்டது. பின்னாளில் இது ஐந்து பாகங்களாக வெளிவந்தது. இதை படித்து முடிக்கவே சில காலம் ஆகும். அப்படிப்பட்ட பிரம்மாண்டமான நாவலை படமாக்கும் முயற்சியில் பலர் ஈடுபட்டனர். ஆனால் அனைத்து முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தன. இந்த நிலையில் இயக்குனர் மணிரத்னம் இந்த படத்தை படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். தற்போது படம் இரண்டு பாகங்களாக வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு பாகங்களும் எடுத்து முடிக்கப்பட்டுவிட்டது. முதல் பாகம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கிறது.

தெலுங்கில் மிக பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட பாகுபலி மற்றும் ஆர்ஆர்ஆர் போன்ற கதைகளை எல்லாம் மிஞ்சு அளவிற்கு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதாக ரசிகர்கள் பூரிப்படைந்து வருகின்றனர். சோழர்களின் பெருமையை சொல்லும் இந்த நாவலை படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டதற்காக மணிரத்னத்திற்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. பல கதாபாத்திரங்களைக் கொண்ட இந்த படத்தை எடுப்பது ஒரு சவால்தான். அதை வெற்றிகரமாக நிறைவேற்றிக் காட்டி இருக்கிறார் மணிரத்தினம். இந்தப் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்திக், ஐஸ்வர்யாராய், திரிஷா, சரத்குமார், பார்த்திபன், ஜெயராம் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சுபாஷ்கரன் தயாரித்து இருக்கிறார்.
இந்த படத்தின் பொன்னி நதி என்ற முதல் பாடல் வெளியானது. அதாவது கல்கியின் நாவல் தொடங்கும் பொழுது ஆடிப்பெருக்கு தினத்தில், வந்திய தேவன் காவிரி கரையில் தன் குதிரையை ஓட்டிக்கொண்டு வரும் பொழுது சோழ நாட்டின் அழகை பார்த்து வியந்து கொண்டே வருவான். இதை கல்கி, வந்தியதேவனுடைய பிரம்மிப்பையும், சோழ நாட்டினுடைய அழகையும் மிக அழகாக வர்ணித்து இருப்பார். ஆடிப்பெருக்கு தினத்தில் காவிரி ஆற்றங்கரையில் மக்கள் கூடி மகிழ்ந்திருக்கும் அந்த நிகழ்வையும், சோழ நாட்டில் நெல் அவிக்கும் வாசனையும் கூட அவர் அழகாக வர்ணித்து இருப்பார். அதை மையமாகக் கொண்டு தற்போது பொன்னி நதி என்ற பாடல் வெளியானது. அதில் வன்னிய தேவனாக நடித்த கார்த்தி பாடல் முழுவதும் தோன்றுகிறார் இந்த பாடலை ஏ.ஆர் ரகுமான் பாடியிருக்கிறார். தற்போது இந்த பாடலை அமெரிக்காவில் லைவ்வாக பாடி இருக்கிறார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video..
Youtube Video Code Embed Credits: Tips Tamil