பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து மனதை மயக்கும் முதல் சிங்கிள் பாடல் “அக நக” வெளியானது.!

வெளியிட்டது

பொன்னியின் செல்வன் திரைப்படம் அடுத்த மாதம் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் தற்போது படத்தில் இருந்து அப்டேட்டுகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாக தொடங்கி இருக்கின்றன. தற்போது இரண்டாம் பாகத்தில் இருந்து முதல் சிங்கிள் பாடல் “அக நக” என்ற பாடல் வெளியாகியிருக்கிறது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த பாடல் வெளியான சில நிமிடங்களில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குந்தவை மற்றும் வந்திய தேவனின் காதலை அழகாக எடுத்துரைக்கும் வண்ணம் இந்த பாடல் இருக்கும் என்று தெரிகிறது. அமரர் கல்கி எழுதிய பிரம்மாண்ட நாவலான பொன்னியின் செல்வன் கதையை அடிப்படையாகக் கொண்டு மணிரத்தினம் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், விக்ரம், நடிகர் கார்த்திக், பிரபு, ஜெயராம், சரத்குமார், பிரகாஷ் ராஜ், பார்த்திபன் என பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். கடந்த மாதம் செப்டம்பர் 30ம் தேதி இந்த படம் உலகம் எங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து மனதை மயக்கும் முதல் சிங்கிள் பாடல் "அக நக" வெளியானது.! 1

தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் கன்னடம், ஹிந்தி என மொத்தம் ஐந்து மொழிகளில் இந்த திரைப்படம் உருவாகி இருக்கிறது. தமிழகத்தை ஆண்ட சோழப் பேரரசுகளின் வாழ்க்கை வரலாற்றை சில புனைவு கதாபாத்திரங்களுடன் மிகப் பெரிய நாவலாக படைத்திருந்தார் கல்கி. தமிழில் அமைந்த பிரம்மாண்டமான நாவலில் முதன்மையானதாக பொன்னியின் செல்வன் விளங்கிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க, இயக்குனர் மணிரத்தினம் இயக்கியிருந்தார். ஏ ஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். படத்தின் முதல் பாகத்தில் இருந்த பொன்னி நதி பார்க்கணுமே, அலைகடல் போன்ற பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தன. தற்போது இரண்டாவது பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது படத்தில் இருந்து அப்டேட்டுகள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.

அந்த வகையில் முதல் அப்டேட்டாக படத்தின் முதல் சிங்கிள் பாடல் இன்று மாலை 6:00 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன் ஸ்னீக் பீக் வீடியோ நேற்று மாலை வெளியானது. குந்தவை மற்றும் வந்தியத்தேவன் முதல் சந்திப்பின் போதே அக நக என்ற பாடல் பின்னணியில் ஒலிக்கும். எனவே அந்த பாடலின் முழு வடிவமாக இது இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏற்கனவே இந்த பாடலின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான போது அதில், குந்தவை நாச்சியாராக இருக்கும் திரிஷா கைகளில் வாளுடன் கம்பீரமாக நின்றிருக்க, அவருக்கு அருகில் கண்களை கட்டியபடியும், கைகளை பின்னால் கட்டியபடியும் வந்திய தேவன் முழங்காலிட்டு இருந்தார். தற்போது அந்த பாடலின் முழு வீடியோ வெளியாகியிருக்கிறது. மனதை கவரும் வகையில் ஏஆர் ரகுமான் இசையில் அமைந்த அந்த பாடலை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

Youtube Video Embed Code Credits: Tips Tamil

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்