பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் ட்ரெய்லர் தற்போது பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கிறது. பிரம்மாண்டங்களை மிஞ்சும் பிரம்மாண்டமாக இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது. அமரர் கல்கியின் கைவண்ணத்தில் உருவாகி இருந்த பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக்கும் முயற்சியில் இயக்குனர் மணிரத்னம் தற்போது வெற்றி பெற்றிருக்கிறார். இரண்டு பாகங்களாக உருவாகி இருக்கும் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது. பொன்னியின் செல்வன் கதை குறித்து பார்த்தோம் என்றால் அரசர் சுந்தர சோழருக்கு மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். முதல் மகன் ஆதித்த கரிகாலன், இரண்டாவது மகள் குந்தவை, மூன்றாவது மகன் ராஜராஜ சோழனான அருள் மொழி வர்மன். கதைப்படி வானத்தில் தூமகேது தோன்றுகிறது. வானத்தில் இவ்வாறு வால் நட்சத்திரம் தோன்றும் பொழுது அரசு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மறைந்து விடுவார்கள் என்கிற எண்ணம் அரசு குடும்பங்களுக்கு இடையே இருந்து வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இதனால் அடுத்த அரசராக யார் முடி சூட்டுவார்கள் என்கிற எண்ணம் மக்களிடையே எழுந்து வருகிறது. பெற்றோர்களை விட்டு பிரிந்து ஆதித்த கரிகாலன் காஞ்சிபுரத்தில் வாழ்ந்து வருகிறார். மகள் குந்தவை தந்தையுடன் தஞ்சாவூரில் வாழ்ந்து வருகிறார். இதற்கிடையே இலங்கையில் அருள்மொழிவர்மனுக்கு பயங்கரமான ஆபத்து ஏற்படுகிறது. நடுக் கப்பலில் பயங்கர சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார் அருள்மொழிவர்மன். அப்போது மின்னல் தாக்கிய கப்பல் உடைந்து நடுக் கடலுக்குள் விழுகிறார். அந்த சமயம் பாண்டிய நாட்டில் இருந்து சோழ அரசை கைப்பற்ற வரும் நந்தினியை போன்ற உருவம் கொண்ட ஒரு பெண் கடலில் குதித்து அருள்மொழிவர்மனை காப்பாற்றுகிறார். அந்த பெண் யார்? ஊமை ராணி என்று அழைக்கப்படும் அந்தப் பெண்ணுக்கும் தஞ்சாவூரில் சோழர்களை பழிவாங்க உள் புகுந்திருக்கும் பாண்டியர்களின் ஒற்றனாக இருக்கும் நந்தினிக்கும் என்ன சம்பந்தம்.? என்பதெல்லாம் குறித்த விடை இரண்டாம் பாகத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்று பலரும் காத்திருந்த நிலையில் தற்போது இரண்டாம் பாகத்தின் ட்ரெய்லர்வெளியாகி இருக்கிறது.
கடலில் விழுந்த அருள்மொழிவர்மனை ஊமை ராணி காப்பாற்றினாளா? பிறகு என்ன நடந்தது? தஞ்சாவூரில் இருக்கும் நந்தினியை சந்திக்க புறப்படும் ஆதித்த கரிகாலன் என்ன ஆனார்? நந்தினியின் அரண்மனைக்கு செல்வாரா? ஆதித்த கரிகாலனை கொலை செய்ய திட்டமிட்டு தனது கத்தியை கூர்த்தீட்டி வைத்திருக்கும் நந்தினி என்ன செய்யப் போகிறாள்? என்ற அனைத்து கேள்விகளுக்கும் விடையாக இந்த இரண்டாம் பாகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வெளியாகி இருக்கும் டிரைலர் வீடியோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Sun TV