Categories: சினிமா

எதிரிகளின் கதை முடிக்க குதிரை ஏறி புறப்பட்ட சோழ புலிகள்.! ப்ரோமோவை வெளியிட்டது படக்குழு

வெளியிட்டது

பொன்னியின் செல்வன் படத்திலிருந்து தற்போது அடுத்த ப்ரோமோவை வெளியிட்டுள்ளது படக்குழு. கல்கியின் நாவலை தழுவி மிக பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ள பொன்னியின் செல்வன் படம் வருகிற 30-ம் தேதி தமிழகம் எங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் ஏறக்குறைய டிக்கெட்டுகள் அனைத்தும் விட்ட தீர்ந்து விட்டன. அனைத்து திரையரங்குகளும் ஹவுஸ் புல் ஆகியுள்ளன. எனவே படத்தில் இருந்து ஒவ்வொரு ப்ரோமோவாக படக்குழு வெளியிட்டு வருகிறது. தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஆதித்த கரிகாலன், அருள்மொழிவர்மன், மற்றும் வந்திய தேவன் ஆகிய மூவரும் குதிரைகள் ஏறி வருவது போன்ற காட்சிகளை வெளியிட்டுள்ளது.

எதிரிகளின் கதை முடிக்க குதிரை ஏறி புறப்பட்ட சோழ புலிகள்.! ப்ரோமோவை வெளியிட்டது படக்குழு 1

இந்தத் திரைப்படம் கடந்த 2020 ஆம் ஆண்டே ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் கொரோனா காலமாக சூட்டிங் தள்ளிக்கொண்டே போனது. பிறகு 2022 ஆம் ஆண்டு மீண்டும் சூட்டிங்கை ஆரம்பித்தனர். தாய்லாந்து, தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா என பல்வேறு இடங்களில் படப்பிடிப்புகள் நடைபெற்று முடிந்து விட்டன. படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இரண்டு பாகங்களையும் இயக்குனர் மணிரத்தினம் எடுத்து முடித்துள்ளார். முதல் பாகம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே படத்தை பிரமோஷன் செய்யும் பணிகளில் படக்குழு மிகத் தீவிரமாக ஈடுபட்டிருந்தது. இதற்காக அவர்கள் சென்னை, திருவனந்தபுரம், பெங்களூர், ஹைதராபாத், மும்பை, டெல்லி என பல்வேறு நகரங்களில் ப்ரொமோஷன் பணிகளை செய்தனர்.

அமெரிக்கா மற்றும் தமிழகத்தில் ப்ரீ புக்கிங்கில் கோடிகளில் வசூலை குவித்திருக்கிறது பொன்னியின் செல்வன். படம் வெளியாவதற்கு முன்பாகவே இவ்வளவு கோடிகளை குவித்துள்ள பெருமையை பொன்னியின் செல்வன் பெற்றுள்ளது. மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் பான் இந்தியா மூவியாக வெளியாக இருப்பதால் படத்தின் வசூல் ஆயிரம் கோடிகளை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மூன்று நாட்களே இருக்கும் நிலையில் பட குழு ப்ரோமோக்களை வெளியிட்டு வருகிறது. இதில் வந்தியத்தேவன், ஆதித்த கரிகாலன், பொன்னியின் செல்வன் ஆகியோர் குதிரைகளில் ஏறி வலம் வருகின்றனர்.

ஆனால் சிலரோ இது போன்ற காட்சிகளே பொன்னியின் செல்வன் புத்தகத்தில் இல்லை என்று தங்களது கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர். ஆதித்த கரிகாலன் தான் வந்திய தேவனை பொன்னியின் செல்வனை பார்ப்பதற்காக அனுப்பி வைப்பான். பொன்னியின் செல்வன் பார்த்துவிட்டு மீண்டும் தஞ்சைக்கு திரும்புவார்கள். ஆனால் மூவரும் இணைந்து குதிரையில் வருவது போன்ற காட்சிகள் எந்த இடத்திலும் இடம்பெற்றிருக்காது. ஆனால் மணிரத்தினம் கதைகளில் சில மாற்றத்தை செய்திருக்கிறார் என்று அதிருப்தி தெரிவித்திருக்கின்றனர். ஏற்கனவே ராட்சச மாமனே பாடல் வெளியான போது வானதி, கிருஷ்ணர் வேடமிட்டு ஆடுவது போன்று இருந்தது. அது போன்ற காட்சிகள் நாவலில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்