Categories: சினிமா

மிரட்டி எடுத்துள்ள ‘நடிப்பு அரக்கன்’ சீயான்.! பொன்னியின் செல்வன் படத்தின் 2வது பாடல் வெளியானது.!

வெளியிட்டது

பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து அடுத்த பாடலான “சோழா சோழா” என்கிற பாடல் தற்போது வெளியாகியுள்ளது. அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் மிகப் பிரம்மாண்டமான பொருட் செலவில் எடுத்துள்ள படம் தான் பொன்னியின் செல்வன். இந்த படத்தின் படப்பிடிப்புகள் 2020 ஆம் ஆண்டு தாய்லாந்தில் துவங்கியது. பின்னர் கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் தள்ளிக் கொண்டே போனது. தற்போது கொரோனாவின் தீவிரம் குறைந்த காரணத்தினால், விரைந்து இந்த படத்தை எடுத்து முடித்துள்ளார் மணிரத்தினம். இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே முதல் பாகத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. முதல் பாகத்தின் டிரைலரை அடுத்த மாதம் முதலமைச்சர் வெளியிட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மிரட்டி எடுத்துள்ள 'நடிப்பு அரக்கன்' சீயான்.! பொன்னியின் செல்வன் படத்தின் 2வது பாடல் வெளியானது.! 1

முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக உள்ளது. இதனால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படத்தில் சுந்தர சோழன், அருள்மொழி வர்மன், ஆதித்த கரிகாலன், குந்தவை நாச்சியார், நந்தினி, பெரிய பழுவேட்டரையர், சின்ன பழுவேட்டரையர், ஆழ்வார்கடியான் நம்பி என்று பல்வேறு கதாபாத்திரங்கள் இருக்கிறது. இது அனைத்திற்கும் ஆட்களை தேர்வு செய்து மிகப்பிரமாண்டமாக இயக்கியிருக்கிறார் மணிரத்தினம். பொன்னியின் செல்வன் நாவலை பலரும் படமாக்க முயற்சி செய்து தோற்ற நிலையில் மணிரத்னம் தனது சீரிய முயற்சியால் இந்த படத்தை உருவாக்கியிருக்கிறார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

ஏற்கனவே படத்தில் இருந்து பொன்னி நதி என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. படம் குறித்த அப்டேட்டுகள் ஒன்றொன்றாக வெளிவரத் துவங்கி இருக்கின்றன. தற்போது படத்தில் இருந்து இரண்டாவது பாடலான “சோழா சோழா” என்ற பாடல் வெளியாகியுள்ளது. விக்ரம் கதாபாத்திரமான ஆதித்த கரிகாலனுக்கு ஒரு பாடல் வைத்து உள்ளது படக்குழு. ஏற்கனவே வந்திய தேவனுக்கு பொன்னி நதி பாடல் இருந்ததால், அடுத்த அடுத்த கதா பாத்திரங்களுக்கும் பாடல் இருக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. அடுத்த மாதம் செப்டம்பர் 6ஆம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில், படத்தின் டிரைலர் வெளியாக இருப்பதாகவும், ட்ரைலரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையால் வெளியிட இருப்பதாகவும், இதில் ரஜினிகாந்த், கமலஹாசன் என்று பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும். Watch the below video…

Youtube Video Code Embed Credits: Tips Tamil

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்