Categories: சினிமா

பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து தேவராளன் ஆட்டம் பாடலின் வீடியோ சாங் வெளியானது.!

வெளியிட்டது

பொன்னியின் செல்வன் படத்திலிருந்து “தேவராளன் ஆட்டம்” என்ற பாடலின் வீடியோவை வெளியிட்டுள்ளது படக்குழு. கல்கியின் நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ள படம் தான் பொன்னியின் செல்வன். இந்த படத்தை மணிரத்னம் இயக்க, லைகா ப்ரொடக்ஷன் தயாரித்திருக்கிறது. இந்த படத்திற்கு இசை புயல் ஏ.ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். படத்தின் முதல் பாகம் கடந்த 30-ஆம் தேதி வெளியானது. படம் வெளியாகி மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளது. 500 கோடி வசூலை தாண்டி உள்ள நிலையில் படத்திலிருந்து ஒவ்வொரு பாடல்களாக வெளியிட்டு வருகிறது படக்குழு. மேலும் பாடல்கள் உருவான விதம் பற்றியும் அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு வருகிறது படக்குழு. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து தேவராளன் ஆட்டம் பாடலின் வீடியோ சாங் வெளியானது.! 1

ஏற்கனவே படத்திலிருந்து வெளியான ஐந்து லிரிக் பாடல்களும் மிக பெரிய வரவேற்ப்பை பெற்று இருந்தது. ஒவ்வொரு வீடியோக்களும் மில்லியன் கணக்கான பார்வையாளர்களை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பான் இந்தியா மூவியாக இந்த படம் வெளியாகி இருக்கிறது. பொன்னி நதி, சோழா சோழா, ராட்சச மாமனே, சொல், அலைகடல் என்ற ஐந்து பாடல்களின் லிரிக்கல் வீடியோக்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது “தேவராளன் ஆட்டம்” என்ற பாடலின் வீடியோ வெளியாகி இருக்கிறது.

வந்திய தேவனுக்கு பொன்னி நதி பாடலும், ஆதித்த கரிகாலனுக்கு சோழா சோழா என்ற பாடலும், குந்தவை மற்றும் வானதிக்கு சொல் என்ற பாடலும், வந்திய தேவன், வானதி, குந்தவை ஆகியோருக்கு ராட்சச மாமனே என்ற பாடலும், பூங்குழலிக்கு அலைகடல் பாடலும் படத்தில் உள்ளது. தற்போது “தேவராளன் ஆட்டம்” பாடலின் வீடியோ வெளியாகி இருக்கிறது. இந்த பாடலை நீங்களும் காண…Watch the below video.. 

Youtube Video Code Embed Credits: Tips Tamil

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்