பொன்னியின் செல்வன் படத்தின் பாடல் மற்றும் ட்ரெய்லர் செப்டம்பர் 6ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில், தற்போது படத்தின் ட்ரைலர் அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது. கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது தான் இந்த படம். இந்த படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிட்டுள்ளனர். முதல் பாகம் செப்டம்பர் 30ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என பான் இந்தியா மூவியாக வெளியாக உள்ளது. இந்த படத்தில் விக்ரம், கார்த்திக், ஜெயம் ரவி பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா, சரத்குமார், பார்த்திபன் என மிகப் பெரிய நடிகர் பட்டாளங்கள் நடித்துள்ளனர். கீழே கொடுக்கப்பட்டுள்ள ட்ரைலர் வீடியோவை பார்க்கவும்.

படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதோடு படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘பொன்னி நதி பாக்கணுமே’ என்ற பாடல் பலருக்கும் பிடித்தமான பாடலாக மாறிப் போனது. இதை அடுத்து விக்ரமின் ஆதித்த கரிகாலனின் பெருமை சொல்லும் சோழா சோழா என்ற இரண்டாவது பாடல் வெளியானது. அதன் மேக்கிங் வீடியோ சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் பாடல் வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த், கமலஹாசன், இயக்குனர் ஷங்கர் என பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மலையாளம், ஹிந்தி என மொத்தம் ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கிறது. பான் இந்தியா மூவியாக இந்த படம் வெளியாகிறது. தமிழர்களின் பெருமையும் சோழர்களின் வீரத்தையும் இந்தியா முழுமைக்கும் பரப்பும் மணிரத்தினத்தின் இந்த முயற்சி உண்மையிலேயே பாராட்டத்தக்கது.இந்தப் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. நீங்களும் அந்த ட்ரைலரை காண கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.. Watch Ponniyin Selvan Trailer Below…
Youtube Video Code Embed Credits: Tips Tamil