பொன்னியின் செல்வன் படத்தில் அடுத்த பாடலான “சோழா சோழா” என்கிற பாடல் வெளியாகும் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு. இதன்படி வருகிற ஆகஸ்ட் 19ஆம் தேதி மாலை 6 மணிக்கு படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் மிகப் பிரம்மாண்டமான பொருட் செலவில் எடுத்துள்ள படம் தான் பொன்னியின் செல்வன். இந்த படத்தின் படப்பிடிப்புகள் 2020 ஆம் ஆண்டு தாய்லாந்தில் துவங்கியது. பின்னர் கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் தள்ளிக் கொண்டே போனது. தற்போது கொரோனாவின் தீவிரம் குறைந்த காரணத்தினால், விரைந்து இந்த படத்தை எடுத்து முடித்துள்ளார் மணிரத்தினம். இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே முதல் பாகத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. முதல் பாகத்தின் டிரைலரை அடுத்த மாதம் முதலமைச்சர் வெளியிட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படத்தில் சுந்தர சோழன், அருள்மொழி வர்மன், ஆதித்த கரிகாலன், குந்தவை நாச்சியார், நந்தினி பெரிய பழுவேட்டரையர், சின்ன பழுவேட்டரையர், ஆழ்வார்கடியான் நம்பி என்று பல்வேறு கதாபாத்திரங்கள் இருக்கிறது. இது அனைத்திற்கும் ஆட்களை தேர்வு செய்து மிகப்பிரமாண்டமாக இயக்கியிருக்கிறார் மணிரத்தினம். பொன்னியின் செல்வன் நாவலை பலரும் படமாக்க முயற்சி செய்து தோற்ற நிலையில் மணிரத்னம் தனது சீரிய முயற்சியால் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.
ஏற்கனவே படத்தில் இருந்து பொன்னி நதி என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. படம் குறித்த அப்டேட்டுகள் ஒன்றொன்றாக வெளிவரத் துவங்கி இருக்கின்றன. தற்போது படத்தில் இருந்து இரண்டாவது பாடலான “சோழா சோழா” என்ற பாடல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆகஸ்ட் 19ஆம் தேதி மாலை இந்த பாடல் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் செப்டம்பர் 6ஆம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில், படத்தின் டிரைலர் வெளியாக இருப்பதாகவும், ட்ரைலரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையால் வெளியிட இருப்பதாகவும், இதில் ரஜினிகாந்த், கமலஹாசன் என்று பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.