Categories: சினிமா

பொன்னியின் செல்வன் படத்தின் கடைசி பாடல் “தேவராளன் ஆட்டம்” வெளியானது.!

வெளியிட்டது

பொன்னியின் செல்வன் படத்திலிருந்து ஆறாவது சிங்கிள் பாடலான “தேவராளன் ஆட்டம்” பாடலும் வெளியானது. கல்கியின் நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ள படம் தான் பொன்னியின் செல்வன். இந்த படத்தை மணிரத்னம் இயக்க, லைகா ப்ரொடக்ஷன் தயாரித்திருக்கிறது. இந்த படத்திற்கு இசை புயல் ஏ.ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். படத்தின் முதல் பாகம் வருகிற 30-ஆம் தேதி வெளியாக இருப்பதால், படத்தின் பிரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இன்னும் எட்டு நாட்களே உள்ள நிலையில் படத்திலிருந்து ஒவ்வொரு பாடல்களாக வெளியிட்டு வருகிறது. மேலும் பாடல்கள் உருவான விதம் பற்றியும் அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு வருகிறது படக்குழு. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பொன்னியின் செல்வன் படத்தின் கடைசி பாடல் "தேவராளன் ஆட்டம்" வெளியானது.! 1

ஏற்கனவே படத்திலிருந்து ஐந்து பாடல்களும், டீசர் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது. இவை அனைத்தும் பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது. ஒவ்வொரு வீடியோக்களும் மில்லியன் கணக்கான பார்வையாளர்களை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பான் இந்தியா மூவியாக இந்த படம் வெளியாக இருக்கிறது. ஏற்கனவே பொன்னி நதி, சோழா சோழா, ராட்சச மாமனே, சொல், அலைகடல் என்ற ஐந்து பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது ஆறாவது பாடலாக “தேவராளன் ஆட்டம்” என்ற பாடல் வெளியாகி இருக்கிறது.

வந்திய தேவனுக்கு பொன்னி நதி பாடலும், ஆதித்த கரிகாலனுக்கு சோழா சோழா என்ற பாடலும், குந்தவை மற்றும் வானதிக்கு சொல் என்ற பாடலும், வந்திய தேவன், வானதி, குந்தவை ஆகியோருக்கு ராட்சச மாமனே என்ற பாடலும், பூங்குழலிக்கு அலைகடல் பாடலும் வெளியாகியிருந்தது. தற்போது ஆறாவது மற்றும் கடைசி பாடலாக “தேவராளன் ஆட்டம்” வெளியாகி இருக்கிறது. இந்த பாடலை நீங்களும் காண…Watch the below video..

Youtube Video Code Embed Credits: Tips Tamil

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்