Categories: சினிமா

படக்குழுவிற்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்த கேரள மக்கள்..அதிர்ந்து போன அரங்கம்.!

வெளியிட்டது

பொன்னியின் செல்வன் படத்தின் பிரமோஷனுக்காக இன்று கேரளா சென்றுள்ள படக்குழுவை கேரள மக்கள் மிகப் பிரம்மாண்டமான முறையில் வரவேற்று இருக்கின்றனர். மேலும் அங்கு செண்டை மேளம் வாசித்து விக்ரம் ரசிகர்களை மேலும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தி இருக்கிறார். பொன்னியின் செல்வன் திரைப்படம் வருகிற 30-ஆம் தேதி முதல் பாகம் வழியாக இருக்கிறது. இது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கிறது. படம் வெளியாக இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில் படத்தை பிரமோஷன் செய்வதற்காக பட குழு இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளது. அங்கு மிக பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் நிகழ்ச்சியில் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளை செய்ய படக்குழு திட்டமிட்டது. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

படக்குழுவிற்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்த கேரள மக்கள்..அதிர்ந்து போன அரங்கம்.! 1

அதன்படி தற்போது முதலாவதாக திருவனந்தபுரத்திற்கு படக்குழு சென்றது. பின்னர் அடுத்தடுத்த நாட்களில் பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, டெல்லி என தொடர்ந்து சுற்றுப்பயணம் செய்ய உள்ளது. தற்போதைய காலத்தில் ப்ரமோஷன் செய்தால்தான் படம் ஓடும் என்ற நிலை இருப்பதால், பொன்னியின் செல்வன் படக்குழு ப்ரோமஷன் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. மேலும் தமிழர்களின் பெருமையை உலகறிய செய்ய வேண்டும் என்ற காரணத்தினாலும் பிரமோஷன் பணிகளை முடுக்கி விட்டுள்ளது. பொன்னியின் செல்வன் படம் குழு அப்போது படத்தின் மேக்கிங் வீடியோ, பாடல் காட்சிகள் மேக்கிங் வீடியோ என்று பொன்னியின் செல்வன் ரசிகர்களை வைப் மூடிலேயே வைத்து இருக்கிறது. இந்த நிலையில் இன்று கேரளாவுக்கு சென்ற அவர்களுக்கு மிகப் பிரமாண்டமான வரவேற்கை கேரள ரசிகர்கள் வழங்கி இருக்கின்றனர்.

த்ரிஷா, விக்ரம், ஜெயம் ரவி என ஒவ்வொருவரும் அரங்கில் உள்ளே நுழையும் போதும், தனது மொபைல் போனில் உள்ள டார்ச் லைட்டை ஆன் செய்தும், கத்தியும், கரகோஷம் எழுப்பியும் வரவேற்பு கொடுத்தனர். இந்த வரவேற்பை பார்த்த பட குழு சற்று பிரம்மித்து போயிருக்கிறது என்றே சொல்லலாம். மேலும் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் சீயான் விக்ரம் செண்டை மேளம் அடித்தார். அதைப் பார்த்த அரங்கம் கரவொலியால் ஒரு நிமிடம் அதிர்ந்தே போனது. அந்த வீடியோக்கள் தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவை காண.. Watch the below video..

Youtube Video Code Embed Credits: Film Focus

 

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்