Categories: சினிமா

பாகுபலி, RRR படங்களை அடித்து துவம்சம் செய்துள்ள ‘பொன்னியின் செல்வன்’ ட்ரைலர் வெளியானது

வெளியிட்டது

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் பிரம்மாண்டமான ட்ரெய்லர் தற்போது வெளியாகியிருக்கிறது. 1950களில் வார இதழில் சிறுகதையாக எழுதி வந்த நாவல் தான் பொன்னியின் செல்வன். இந்த கதையை பின்னாளில் தொகுத்து ஐந்து பாகங்களாக வெளியிட்டனர். சோழர்களின் அரியணைக்கு வரும் ஆபத்துகளையும், அதிலிருந்து அவர்கள் எவ்வாறு தங்கள் அரியனையை மீட்டு, சோழ சாம்ராஜ்யத்தை விரிவு செய்தனர் என்பது குறித்த கதை தான் பொன்னியின் செல்வன். இதை அமரர் கல்கி மிக அழகாக சோழ நாட்டின் வளத்தையும், அந்த நாட்டில் ஆட்சி புரிந்த ராஜராஜ சோழன் முதலான அரசர்களின் பெருமைகளையும் குறித்து மிக நேர்த்தியாக எழுதியிருப்பார். இந்த கதையை படமாக்க பலரும் முயற்சி செய்து தோற்றனர். தற்போது இந்த கதையை படமாக்கி மணிரத்தினம் சாதனை படைத்திருக்கிறார். கீழே உள்ள டிரெய்லர் வீடியோவை பார்க்கவும்.

பாகுபலி, RRR படங்களை அடித்து துவம்சம் செய்துள்ள 'பொன்னியின் செல்வன்' ட்ரைலர் வெளியானது 1

பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கிறது, முதல் பாகம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இன்று இந்த படத்தின் பிரம்மாண்ட இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் மாலை 6:00 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கமலஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். லைகா ப்ரொடக்ஷன்ஸ் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. இந்த படத்தின் டீசர், பாடல்கள் என அனைத்தும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. தற்போது படத்தின் டிரைலரும் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மலையாளம், ஹிந்தி என மொத்தம் ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கிறது. பான் இந்தியா மூவியாக இந்த படம் வெளியாகிறது. தமிழர்களின் பெருமையும் சோழர்களின் வீரத்தையும் இந்தியா முழுமைக்கும் பரப்பும் மணிரத்தினத்தின் இந்த முயற்சி உண்மையிலேயே பாராட்டத்தக்கது.இந்தப் படத்தின் டிரைலரை நீங்களும் காண கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.. Watch Ponniyin Selvan Trailer Below…

Youtube Video Code Embed Credits: Tips Tamil

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்