பொன்னியின் செல்வன் படத்தின் டிரைலரை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. பொன்னியின் செல்வன் படத்தின் ஷூட்டிங் கடந்த 2020 ஆம் ஆண்டு தாய்லாந்தில் தொடங்கியது. ஒரு மாதம் மட்டுமே படப்பிடிப்புகள் நடைபெற்ற நிலையில் கொரோனா ஊரடங்கின் காரணமாக அப்படியே கிடப்பில் போடப்பட்டது. பின்னர் சிறிது சிறிதாக கொரோனா ஊரடங்குகள் குறைந்த பின்னர் படத்தின் முழு பாகமும் எடுக்கப்பட்டு விட்டது. இரண்டு பகுதிகளாக வெளிவர உள்ள இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 31ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு முடியும் வரை படத்தின் முதல் பார்வை கூட வெளியிடப்படவில்லை.

பின்னர் படத்தின் டீசர் வெளியீட்டு விழா ஜூலை முதல் வாரத்தில் தஞ்சாவூரில் நடத்த திட்டமிட்டு இருந்ததாக நடிகழ் கார்த்தி கூறி இருந்தார். ஆனால் படத்தில் நடிகர் நடிகர்களுக்கு நேரம் ஒத்து வராத காரணத்தினால், அந்த திட்டம் கைவிடப்பட்டது. ஜூலை நான்காம் தேதி முதல் கரிகாலன், வந்தியத்தேவன், நந்தினி, குந்தவை நாச்சியார் அருள்மொழி வர்மன் என கதையின் முக்கிய கதாபாத்திரங்களை ஒவ்வொரு நாளாக அறிமுகம் செய்து போஸ்டர்கள் வெளியிடப்பட்டது. தொடர்ந்து ஜூலை எட்டாம் தேதி படத்தின் டீசரை வெளியிட்டனர். படத்தின் டீசர் பல லட்சம் பார்வையாளர்களை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. டீசர் நிகழ்ச்சியை தொடர்ந்து பாடல் வெளியீட்டு விழாக்களை பிரம்மாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டு வந்தனர். ஆனால் அந்தத் திட்டமும் சில காரணங்களால் கைவிடப்பட்டது.
தற்போது மீண்டும் நேரு விளையாட்டு அரங்கில் செப்டம்பர் 6ஆம் தேதி ஏ ஆர் ரகுமானின் பிரம்மாண்ட நிகழ்ச்சி உடன் பொன்னியின் செல்வன் பாடல் வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது. அந்த விழாவிற்கு தமிழின் முன்னணி நடிகர்களாக இருக்கும் ரஜினிகாந்த், கமலஹாசன் ஆகியவரை அழைத்து நடத்த திட்டமிட்டுள்ளனர். அதேசமயம் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினை இந்த நிகழ்வில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்க உள்ளனர். அவர் இந்த பொன்னியின் செல்வன் ட்ரைலரை வெளியிடுவார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.