பொன்னியின் செல்வன் படத்திலிருந்து நந்தினி மற்றும் குந்தவை இருவரும் சந்தித்து கொள்ளும் ப்ரோமோ வெளியானது. கல்கியின் நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ள படம் தான் பொன்னியின் செல்வன். இந்த படத்தை மணிரத்னம் இயக்க, லைகா ப்ரொடக்ஷன் தயாரித்திருக்கிறது. இந்த படத்திற்கு இசை புயல் ஏ.ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். படத்தின் முதல் பாகம் வருகிற 30-ஆம் தேதி வெளியாக இருப்பதால், படத்தின் பிரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் படத்திலிருந்து ஒவ்வொரு பாடல்களாக வெளியிட்டு வருகிறது படக்குழு. மேலும் பாடல்கள் உருவான விதம் பற்றியும், ப்ரோமோவையும் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது படக்குழு. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே படத்திலிருந்து ஆறு பாடல்களும், டீசர் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது. இவை அனைத்தும் பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது. ஒவ்வொரு வீடியோக்களும் மில்லியன் கணக்கான பார்வையாளர்களை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பான் இந்தியா மூவியாக இந்த படம் வெளியாக இருக்கிறது. ஏற்கனவே பொன்னி நதி, சோழா சோழா, ராட்சச மாமனே, சொல், அலைகடல், தேவராளன் ஆட்டம் போன்ற பாடல்கள் வெளியாகி இருக்கிறது.
இந்த நிலையில் படத்தில் இருந்து சில ப்ரோமோ காட்சிககளை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது படக்குழு. அந்த வகையில் நந்தினி மற்றும் குந்தவை இருவரும் சந்தித்து கொள்ளும் ப்ரோமோவை வெளியிட்டுள்ளது. பார்ப்பதற்கே மாஸாக இருக்கும் அந்த காட்சிகளை நீங்களும் பாருங்கள்.!