Categories: சமூகம்

அரபிக் குத்து பாடலில் தான் ஆடியதை நீக்கிய படக்குழு.! வீடியோவாக வெளியிட்ட பூஜா ஹெக்டே.!

வெளியிட்டது

கடந்த ஆண்டு வெளியாகி தமிழ் ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை அடித்த ஒரு பாடல் என்று சொன்னால் அது அரபிக் குத்து பாடல் தான். அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் இந்த பாடலை எழுதியிருந்தார். இதை அனிருத் மற்றும் ஜோனிதா காந்தி இருவரும் பாடியிருந்தனர். இந்தப் படத்தில் நடித்த பூஜா ஹெக்டே தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு அரபிக் குத்துப் பாடலில் இருந்து தன்னுடைய காட்சிகள் சிலவற்றை நீக்கி இருந்ததாகவும், அந்த காட்சிகளை தற்போது உங்களுக்காக பதிவிடுவதாகவும் கூறி அந்த வீடியோவை பதிவிட்டு இருக்கிறார். சுமார் பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் அந்த வீடியோவை பார்த்து ரசித்திருக்கின்றனர். தளபதி விஜய் நடிப்பில் உருவான பீஸ்ட் படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. இந்த படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கியிருந்தார். இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் பூஜா ஹெக்டே. இந்த படம் வெற்றி பெற்ற முக்கியமாக காரணமாக இருந்தது, இந்த படத்தில் இடம் பெற்ற பாடல்களாகும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அரபிக் குத்து பாடலில் தான் ஆடியதை நீக்கிய படக்குழு.! வீடியோவாக வெளியிட்ட பூஜா ஹெக்டே.! 1
அதிலும் குறிப்பாக அரபிக் குத்து என்கிற பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள் வரை ரீல்ஸ் செய்யாத ஆட்களே இருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்தது. இதுவரை சுமார் 500 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்திருக்கிறது அரபிக் குத்து. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரமாக நடித்தவர் நடிகை பூஜா ஹெக்டே. இவர் தமிழ் சினிமாவில் முகமூடி என்கிற படத்தின் மூலமாகத்தான் முதன்முறையாக அறிமுகமானார். தற்போது தெலுங்கு உலகின் முன்னணி நடிகையாகவும் வலம் வருகிறார். மேலும் தமிழ் மட்டுமல்லாமல் இந்தி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக இவர் நடித்த படத்தில் வந்த புட்ட பொம்மா என்கிற பாடல் மூலமாக இந்திய அளவில் மிகப் பிரபலமானார். பூஜா ஹெக்டே தமிழில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் பீஸ்ட் படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார்.

சமூக வலைத்தளங்களில் மிக ஆக்டிவாக இருக்கும் பூஜா, அடிக்கடி வீடியோக்களை வெளியிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் அரபிக் குத்துப்பாடலில் தான் நடனம் ஆடிய பகுதியை நீக்கி இருந்ததாகவும் அதை தற்போது நீங்கள் பார்ப்பதற்காக பகிர்ந்திருப்பதாகவும் கூறி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவை ஷேர் செய்து வருகிறார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் ஹாட் டாபிக்காக ஓடிக் கொண்டிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

 

YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்