Categories: சினிமா

அடேய் இது பொம்மை படம்டா.! பிரபாஸின் ஆதி புருஷ் படத்தை வச்சி செய்யும் தமிழ் ரசிகர்கள்.!

வெளியிட்டது

தெலுங்கின் முன்னணி நடிகராக இருக்கும் பிரபாஸ் நடிக்கும் ஆதிபுருஷ் படத்தின் டீசர் நேற்று வெளியானது. இராமாயண கதையை அடிப்படையாகக் கொண்டே இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பான் இந்தியா மூவியாக ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானபோது கையில் அம்புடன் ராமன் ஆக தோன்றினார் பிரபாஸ். இதனால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. ஆனால் இதன் டீசர் வெளியான போது, பலருக்கும் ஏமாற்றமே இருந்தது. ஏனென்றால் இந்த படம் அனிமேஷன் முறையில் உருவாகி இருக்கிறது. இதனால் பிரபாஸ் ரசிகர்கள் பலரும் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் தமிழ் டீசரை பார்த்த பலரும் இந்த டீசரை கலாயத்து மீம்ஸ்களும், கமெண்ட்களும் போட்டு வருகின்றனர்.

அடேய் இது பொம்மை படம்டா.! பிரபாஸின் ஆதி புருஷ் படத்தை வச்சி செய்யும் தமிழ் ரசிகர்கள்.! 1

பொன்னியின் செல்வன் வெளியீட்டுக்கு பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களுக்கு இடையே தொடர்ந்து ட்விட்டரில் மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. பொன்னியின் செல்வன் பாகுபலி அளவிற்கு இல்லை என்றும், மொக்கையாக இருக்கிறது என்றும் தெலுங்கு ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். ஆந்திர பாக்ஸ் ஆபிஸ் நிறுவனமே இது ஒரு சாதாரண வரலாற்றுப் படம் என்று விமர்சித்திருந்தது. இதனால் பலரும் தெலுங்கு ரசிகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்து வந்தனர். மேலும் அடுத்து வரும் தெலுங்கு படங்களை தமிழகம் புறக்கணிக்கும் என்றும் அவர்கள் பேசி வந்தனர். தற்போது ஆதிபுருஷ் வெளியான பின்பு இந்த படத்தையும் பலரும் கலாய்க்க தொடங்கி இருக்கின்றனர்.

இந்தப் படத்தில் பிரபாஸின் முகத்தை பார்க்கும் பொழுது சீமானின் முகத்தைப் போன்று இருப்பதாகவும், மேலும் இது சுட்டி டிவியில் வரவேண்டிய படம் என்றும் கலாய்த்து மீம்ஸ்களைப் போட்டு வருகின்றனர். இதை வைத்துக் கொண்டா பொன்னியின் செல்வனை கலாய்த்தீர்கள் என்று தெலுங்கு ரசிகர்களுக்கு அவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்