விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டவர் பிரதீப் ஆண்டனி. இவர் தற்போது தனது காதலியுடன் கோவாவில் ஊர் சுற்றி வருகிறார். அந்த புகைப்படங்களை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 7ல் முக்கிய போட்டியாளராக இருந்தவர் பிரதீப் ஆண்டனி. அதீத வார்த்தை பிரயோகங்களும், கேம் என்கிற பெயரில் இவர் அதீதமாக விளையாடியதுமே இவருக்கு எதிர்வினையாக அமைந்தது.
வீட்டில் இருக்கும் பல போட்டியாளர்களும் இவரால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று குற்றச்சாட்டை முன் வைத்தனர்.
இதனால் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு கமலஹாசனால் வெளியேற்றப்பட்டார் பிரதீப். தமிழ் பிக் பாஸ் வரலாற்றில் எந்த ஒரு போட்டியாளரும் ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பப்பட்டது இல்லை. பிக் பாஸ் சீசன் 3ன் போது சரவணன் பெண்களை பஸ்ஸில் உரசி இருக்கிறேன் என்று பேசியதற்காக அவரை அப்படியே அனுப்பி இருந்தது பிக் பாஸ்.
ஆனால் ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்டவர் என்கிற முத்திரையை பிரதீப் ஆண்டனி பெற்றிருக்கிறார். விஜய் டிவியின் இந்த முடிவிற்கு ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
ரெட் கார்டு கொடுக்கும் அளவிற்கு பிரதீப் ஒன்றும் பெரிய எந்த தவறையும் செய்து விடவில்லை. அவரால் பெண்களுக்கு எந்தவித பாதிப்பும் அங்கு ஏற்படவில்லை. அவர் துடுக்குத்தனமாக பேசுவாரே தவிர வேறு எந்த பிரச்சனையும் அவரால் ஏற்படவில்லை என்று கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
விஜய் டிவி மற்றும் கமலின் இந்த முடிவுக்கு ரசிகர்கள் பலரும் எதிர்ப்புகளை தெரிவித்த நிலையில், பிரதீப்புக்கு ஆதரவாக பல்வேறு வீடியோக்கள் பதிவுகள் இணையத்தில் வைரலாகி வந்தது.
தொடர்ந்து பிரதீப்பும் தனது ட்விட்டர் பக்கத்தில் ஏதாவது ஒரு பதிவுகளை போட்டுக் கொண்டு வந்தார். குறிப்பாக கமலஹாசனை விமர்சிக்கும் வகையில் “தீர விசாரிப்பதே மெய்” என்று அவர் கூறியிருந்தார். இந்த நிலையில் “நீங்களாச்சு, உங்கள் பிக் பாஸ் ஆச்சு, ஆள விடுங்கடா, நான் கோவாவிற்கு போகிறேன், என்னை நம்பி தயாரிப்பாளர்கள் கதை கேட்டு வருகின்றனர். கோவாவிற்கு சென்று சிறந்த கதையுடன் வருகிறேன்” என்று கடைசியாக பதிவு ஒன்றே போட்டிருந்தார்.
தொடர்ந்து இன்று மீண்டும் ஒரு புது பதிவை போட்டிருக்கிறார். அதில் தனது காதலியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பகிர்ந்த அவர், “போன முறை கோவா ஃபிலிம் ஃபெஸ்டிவல் வந்த பொழுது உள்ளே சென்று பணத்தை வென்று ட்ரிப் செல்வதற்கு எக்ஸ்ட்ராவாக காசை உஷார் பண்ணி இருந்தேன். இந்த முறையும் நடக்கும் என்று பார்த்தேன், ஆனால் நக்கிட்டு போயிடுச்சு” என்று பதிவிட்டு இருக்கிறார்.!