“நீங்களாச்சு பிக்பாஸ் ஆச்சு.! ஆள விடுங்க டா.!” திடீரென பிரதீப் ஆண்டனி போட்ட வைரல் பதிவு.!

வெளியிட்டது

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சர்ச்சை போட்டியாளராக வலம் வந்தவர் நடிகர் பிரதீப் ஆண்டனி. இவர் தற்போது பிக்பாஸ் குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் ட்வீட் ஒன்றைப் போட்டிருக்கிறார். அதில் அவர், “நீங்களாச்சு உங்க பிக்பாஸ் ஆச்சு, நான் கோவா போறேண்டா” என்று பதிவிட்டுள்ளார். இயக்குனராக வேண்டும் என்ற முனைப்பில் இருந்த பிரதீப் ஆண்டனிக்கழகு பிக் பாஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. சீசன் 7 போட்டியாளராக கலந்து கொண்ட இவர், ஆரம்பம் முதலே ஏதாவது பேசி சர்ச்சையில் சிக்கி வந்தார். அதீத பேச்சு, மரியாதை குறைவான பேச்சு, கெட்ட வார்த்தை என தொடர்ந்து சர்ச்சைகளை சிக்கி வந்தார். இந்த நிலையில் கூல் சுரேஷ் உடனான சண்டை பெரிதாக, சுரேஷின் அம்மாவின் இறப்பு பற்றி எல்லாம் பேசி தன் தலையில் மண்ணை வாரிப் போட்டுக்கொண்டார்.

"நீங்களாச்சு பிக்பாஸ் ஆச்சு.! ஆள விடுங்க டா.!" திடீரென பிரதீப் ஆண்டனி போட்ட வைரல் பதிவு.! 1
கூல் சுரேஷ் சர்ச்சை குறித்து பேசுவதற்காக உரிமைக் குரல் தூக்கிய மற்ற ஹவுஸ் மேட்ஸ், பின்னர் அவருக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என்ற நிலைக்குச் சென்றனர். பின்னர் பல ஹவுஸ் மேட்ஸின் கோரிக்கையை ஏற்று பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது. ரெட் கார்டு கொடுத்தது நியாயமற்றது, அவரை வார்னிங் செய்திருக்கலாம் என்று சொல்லி பிரதீப்புக்கு ஆதரவாக பல ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். தொடர்ந்து சமூக வலைதளங்களில் பிரதீப்புக்கான ஆதரவு ஏறிக் கொண்டே இருந்தது. மீண்டும் வைல்டு கார்டு போட்டியாளராக பிரதீப் வருவார் என்று பலரும் எதிர்பார்த்தனர். அதற்காக அவர் பிக் பாஸ் குழுவினருக்கு கோரிக்கை ஒன்றை வைத்தார். கேப்டன் பதவி மற்றும் இரண்டு பேரை எலிமினேட் செய்யும் அதிகாரம் கொடுக்கப்பட்டால் மீண்டும் உள்ளே வருவதாக அறிவித்திருந்தார்.


ஆனால் அது எதுவுமே நிகழவில்லை. இந்த நிலையில் மீண்டும் இன்று ஒரு பதிவை போட்டு இருக்கிறார். அதில், “சரி ஜாலியா இருந்துச்சு, இப்ப ஒரு நாலு ஐந்து தயாரிப்பாளர்கள் என்னை நம்பி கதை கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள். நான் IFFI கோவா 2024 கிளம்புகிறேன். 4 ஃபாரின் படம் பார்த்துட்டு, திருடி ஒரு நல்ல ஸ்கிரிப் ரெடி பண்ணி படத்தோட வரேன். ஆள விடுங்க, நீங்களாச்சு பிக் பாஸ் ஆச்சு, போயிட்டு வரேன், நல்லா இருங்க” என்று ட்வீட் ஒன்றை பகிர்ந்திருக்கிறார். அவரின் இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது..!

Twitter Original Source From: Pradeep Anotny

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்