கேப்டன் மேல என்ன வன்மம்.? மனம் உடைந்து தேம்பி தேம்பி அழுத பிரேமலதா விஜயகாந்த்.!

வெளியிட்டது

தேமுதிக தலைவர் விஜயகாந்த் குறித்து பேசிக் கொண்டிருந்த பிரேமலதா விஜயகாந்த் திடீரென கண் கலங்கி அழுதிருக்கிறார். அவர் மீது உங்களுக்கு ஏன் இப்படி ஒரு வன்மம் என்று அவர் கேள்வி எழுப்பி இருக்கிறார். திரையுலகம் மற்றும் அரசியல் உலகத்தில் எதிரியே இல்லாத ஒரு நபராக வலம் வந்து கொண்டிருப்பவர் கேப்டன் விஜயகாந்த். சில ஆண்டுகளாக வீட்டிலேயே தொடர் முடக்கத்தில் இருந்து வருகிறார். சில ஆண்டுகளாக அவருக்கு தொண்டையில் ஏற்பட்ட பிரச்சனை மற்றும் கிட்னி மாற்று அறுவை சிகிச்சையால் தொண்டர்களை சந்திப்பதை கூட தவிர்த்து வருகிறார். இந்த நிலையில் வழக்கமான உடல் பரிசோதனைக்குச் சென்ற அவருக்கு உடல்நிலை மோசமடைந்தது. தொடர்ந்து அவர் மருத்துவமனையில் இரண்டு வாரங்களுக்கும் மேலாக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கேப்டன் மேல என்ன வன்மம்.? மனம் உடைந்து தேம்பி தேம்பி அழுத பிரேமலதா விஜயகாந்த்.! 1
இரண்டு நாளில் வீடு திரும்புவார் என்று கூறப்பட்ட நிலையில், இரண்டு வாரங்களாகியும் அவர் இன்னும் வீடு திரும்பவில்லை. எனவே சில youtube சேனல்கள் அவர் குறித்து வதந்திகளை பரப்பத் தொடங்கின. அவருக்கு தொண்டையில் ஓட்டை போட்டு உணவளித்து வருவதாக தவறான தகவல்களை பரப்பி வந்தனர். இது குறித்து அவரது மனைவியும் தேமுதிக பொருளாளருமான பிரேமலதா விளக்கம் அளித்த போதும் பலரும் வதந்திகளை தொடர்ந்து பரப்பி வந்தனர். இந்த நிலையில் சென்னையில் வெள்ள பாதிப்பு பணிகளை பார்வையிட வந்த பிரேமலதா விஜயகாந்த் கண்கலங்கி அழுதிருக்கிறார். விஜயகாந்த் உடல்நிலை குறித்து பேசும் பொழுது அவர் பேச முடியாமல் விம்மி விம்மி அழுத காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.


அவர் பத்திரிகையாளரிடம் பேசும் பொழுது, “உண்மை நிலை தெரியாமல் எதற்காக இப்படி தவறான செய்திகளை பரப்புகிறீர்கள்? ஏன் தேவையில்லாத வதந்திகளை யூடியூப் சேனல்கள் வெளியிடுகின்றன? கேப்டன் மீது அப்படி ஒரு என்ன வன்மம்? மருத்துவமனையில் இருக்கும் ஒருவர் மீது இப்படி செய்திகளை பரப்பும் பொழுது அவருடைய மனைவியாக அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கும் எனக்கு எவ்வளவு வேதனையாக இருக்கும்? எனவே ஒரு விஷயத்தை வெளியிடுவதற்கு முன்பு அதன் உண்மை தன்மை குறித்து அறிந்து கொண்டு வெளியிடுங்கள்” என கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்தார். அந்த வீடியோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Polimer News

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்