
தனது மகனின் பிறந்த நாளுக்கு சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சென்று அர்ச்சனை செய்ய முற்பட்ட அரசு செவிலியர் லதாவை, அங்கிருந்த தீட்சிதர் தர்ஷன் தாக்கி இருக்கிறார். மந்திரங்கள் சொல்லாமல், அர்ச்சனை செய்யாமல் தேங்காயை மட்டும் உடைத்து தந்தது குறித்து கேட்ட லதாவை தர்ஷன் கன்னத்தில் அறைந்து இருக்கிறார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து , சிதம்பரம் நகர காவல்நிலையத்தில் தர்ஷன் மீது 3 பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதனிடையே, நேற்று நடைபெற்ற கோயில் தீட்சிதர்களின் ஆலோசனை கூட்டத்தில், தர்ஷனை 2 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.