
வரும் டிசம்பர் மாதம் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே அரசு முறைப்பயணமாக இந்தியாவிற்கு வருகை தர உள்ளார்.
இது குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது, வரும் டிசம்பரில் ஜப்பான் பிரதமர் சின்சோ அபே, அரசு முறைப்பயணமாக இந்தியா வருகிறார். அதற்கு முன்னதாக இந்தியா -ஜப்பான் ஆகிய இரு நாடுகளிடையே ராணுவம், மற்றும் வெளியுறவு அமைச்சர்களிடையே சந்திப்பு இம்மாதம் நடைபெற உள்ளது. அதன் பின்னர் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இந்தியா வருகிறார்.இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.