தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் பிரியா பவானி சங்கர். இவர் நடித்த மேயாத மான் மாபெரும் ஹிட் அடித்ததை தொடர்ந்து சினிமாவில் முன்னணி நடிகையாக உருவெடுத்து உள்ளார். செய்தி வாசிப்பாளராக ஆரம்பத்தில் பணியாற்றி வந்த இவர், பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய கல்யாணம் முதல் காதல் வரை தொடரில் நாயகியாக நடித்து சின்னத்திரைக்குள் என்ட்ரி கொடுத்து இருந்தார்.

பின்னர் இவர் வெள்ளித்திரையில் நடித்த மேயாத மான் படம் ஹிட் அடித்ததில் முதல் படத்திலேயே முன்னணி நடிகையாக உருவெடுத்து உள்ளார் ப்ரியா.தற்போது தொடர்ந்து படங்களில் கதாநாயகியாக நடித்து அசத்தி வருகிறார். இவர் நடித்த சில படங்கள் தோல்வியை சந்தித்ததால், நெட்டிசன்கள் இவரை ராசி கெட்டவர் என கூறி கடுமையாக விமர்சனம் செய்து இருந்தனர்.
இந்த விமர்சனங்களுக்கு எல்லாம் டிமாண்டி காலனி படத்தின் வெற்றியின் மூலம் பதிலடி கொடுத்து இருந்தார் நடிகை ப்ரியா. இவருக்கு அண்மையில் வெளியான இந்தியன் 2 மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது. இதனால் கதைகளை கருத்தாக கேட்டு நடிக்க தொடங்கி இருக்கிறார் நடிகை பிரியா பவானி சங்கர். தற்போது இவர் வெளிநாட்டில் ஓய்வெடுத்து வரும் நிலையில் அந்த புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.