காதலனை பிறந்துவிட்டதாக பரவிய வதந்தி.! ஜோடியாக வந்து முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி ஷங்கர்.!

வெளியிட்டது

நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடிகை ப்ரியா பவானி ஷங்கர் தனது காதலருடன் நண்பரின் திருமண விழாவில் கலந்து கொண்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் செய்தி வாசிப்பாளராக இருந்து தமிழ் வெள்ளித்திரையில் ஜொலித்துக் கொண்டிருப்பவர்தான் பிரியா பவானி சங்கர்.

காதலனை பிறந்துவிட்டதாக பரவிய வதந்தி.! ஜோடியாக வந்து முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி ஷங்கர்.! 1

வெள்ளத்திரைக்கு வருவதற்கு முன்பாக விஜய் டிவியில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரில் நடித்தார். யதார்த்தமான தடிப்பை வெளிப்படுத்திய பிரியா பவானிசங்கருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

தமிழில் ‘மேயாத மான்’ என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்தார். பின்னர் ‘கடைக்குட்டி சிங்கம்’ என்ற படத்தில் நடித்தார். பிறகு எஸ்.ஜே சூர்யாவுடன் இணைந்து ‘மான்ஸ்டர்’ படத்தில் நடித்தார். இந்த படம் இவருக்கு பெரிய ஹிட் கொடுத்தது. மீண்டும் எஸ்.ஜே சூர்யாவுடன் இணைந்து ‘பொம்மை’ படத்திலும் நடித்து முடித்துள்ளார்.


மேலும் அருண் விஜயுடன் இணைந்து ‘யானை’ படத்திலும், ஜெயம் ரவியுடன் இணைந்து ‘அகிலன்’ படத்தில் போலீஸ் அதிகாரியாகவும் நடித்துள்ளார். தொடர்ந்து ‘ருத்ரன்’, ‘பத்து தல’, தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ போன்ற படங்களிலும் நடித்து முடித்துள்ளார்.

பிரியா பவானி ஷங்கர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ராஜவேலு என்ற தனது கல்லூரி நண்பரை காதலித்து வருகிறார். ஆனால் 10 ஆண்டுகள் ஆன பின்பும் காதலனை திருமணம் செய்து கொள்ளாமல் அவருடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்.

ராஜவேலு மற்றும் பிரியா இருவரும் பிரிந்து விட்டதாக சமீபத்தில் தகவல் வெளியான நிலையில் தனது தோழி திருமணத்தில் இருவரும் ஜோடியாக கலந்து கொண்டுள்ளனர்.

ராஜவேலு பட்டு வேஷ்டி சட்டையிலும், பிரியா பவானி ஷங்கர் பட்டு புடவையிலும் கலந்து கொண்ட புகைப்படங்களை பிரியா பவானி ஷங்கர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்